, இனியவளின் இதய பகிர்வுகள் !: என்றும் உனக்கு சமர்ப்பணம்...
Showing posts with label என்றும் உனக்கு சமர்ப்பணம்.... Show all posts
Showing posts with label என்றும் உனக்கு சமர்ப்பணம்.... Show all posts

2/12/14

சில நேரங்களில் மட்டுமல்ல ...


சில நேரங்களில் மட்டுமல்ல - வாழ்வின்
பல நேரங்களில் தேவை ,

அன்பானவர்களின் அறிவுரையோ 
ஆலோசனையோ அல்ல...

அவர்களின் பொன்னான, 
கண்ணான சில மணித்துளிகள் ;
நாம் சொல்வதை கேட்பதுதான் ....

அன்றி, 

ஆலோசனையோ அறிவுரையோ அல்ல !

பொதுவாக, 

எதிரில் பேசுபவர் சொல்வதையே 
எப்போதும் கேட்டு கொண்டிருக்க தோன்றும் !
ஏனெனில், கிடைக்க பெறாதவர்க்கே 
கிடைப்பதின் நிம்மதி புரியும் !

ஆதலால் சொல்கிறேன்,

கேட்பதும் சுகமே !
பெறுவதில் கிடைக்கும் சுகத்தை விட
தருதலில் உள்ள சுகம் போல !

- குணா ...

2/4/14

நீ !




அமைதியாய் நான் ...
         
                 ஆர்ப்பாட்டமாய் என்னுள்

                              இசைகச்சேரியாய் நீ !


இன்று....



பாலை வனத்தில்
        மாலை நேரத்தில்
                    மழை சாரல் !

இன்று
     என்னவளின் கச்சேரி !
           என் காதுகளில் மட்டும் !
                      என்றும் வரமாக !

2/1/14

நித்தியமாய் என்னுள்ளே....

துக்கத்தினாலோ
துயரத்தினாலோ  - ஏதோ ஒன்று

தூக்கம் இன்றி
தூக்கலாய் ஒரு இரவு ...

நிசப்தமான அமைதி
நிர்மூலமான இருள் ...


நிச்சயமாய் மிக
நிதர்சனமாய் உன்
நினைவுகள் மட்டும்
நித்தியமாய் என்னுள்ளே....


1/28/14

அதெல்லாம் எனக்கு எதற்கு???

சில உறவுகள்... என்றும் ஆச்சர்யம் தருவது... அன்றும் இன்றும் என்றும்... மறுக்கவும் மறக்கவும் முடியாத உறவுகள்.... "சில" என்று அனைவருக்கும் அமைத்து விட கூடியது இல்லை. என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு உறவு இந்த வகையில் கண்டிப்பாக ஒரு ஒருவருக்கும் இருக்கும்... இருக்க வேண்டும். வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு கருவி வேண்டாமா ???

அப்படிதான் .. அது அப்படிதான்... வாழ்கையில், ஒரே ஒரு வார்த்தை / ஒரே ஒரு நொடி / ஒரே ஒரு  நிகழ்வு / ஒரே ஒரு உறவு ... ஏதோ ஒரு "ஒரே ஒரு " போதும். நம் வாழ்க்கையினை மாற்றி விட... அப்படியே புரட்டி போட...

எனக்கும் வந்தது... / கிடைத்தது... /... என்றும் வரமாகவே கருதுகிறேன்... ஒரே ஒரு தருணம்... ஒரே ஒரு நாள்... கடைசியாக ஒரே ஒரு உறவு... கருத்துகளை மாற்றியமைத்தது ... தோழியென வந்து... (சந்தேகம் தான் இந்த நிமிடம் வரை ) தோற்ற பிழைகளை சரி செய்தது...

ஏதோ ஒரு வித்யாசம்... புரியலையே...
எனக்கான, எனக்கே எனக்கான நட்பு... என
உரிமை கொண்டாட விட மாட்டாள்.
பட்டென்று தட்டி விடும் குழந்தை குணம்...
சட்டென்று அணைத்து கொள்ளும் தாய்மை உள்ளம்...
எந்த திசையிலிருந்து பார்த்தாலும்
வித்தியாசமான வரம் அவள்...
என்னை புரிந்து கொண்டவள். ...
நான் புரிந்து கொண்டவள் ,,,
என கூட சொல்ல முடியாது...
புரிந்தும் புரியாத,
புரியாமல் புரிந்த என் உலகமவள் ...
பனியும் கனலும் கலந்த
பகலிரவு அவள் என் உலகில்...
நினைவுகளில் அவளை
நிரப்புவதே சுகம் எனக்கு...
சுவாசமின்றி தவிக்கும் போது
சுகந்தமான  சுவாசம் கிடைப்பது போல
சுகமான சுகம் அவள் ...
அவளுக்கு நான் யாரோ? எப்படியோ ?
அதெல்லாம் எனக்கு எதற்கு???
என்னில் எல்லாமுமாக
என்றும் அவள் ... அவள் மட்டுமே ...



1/6/14

உனக்கும் எனக்குமான ... (நமக்கான நம்) உறவு

 .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நான் உன்னை எனக்காக ஏற்று கொண்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டன ....
ஒரு நாளும் என் செய்கைகளுக்காக நீ கோபித்து கொண்டதில்லை.... பதில் சண்டை போட்டதும் இல்லை ... உன்னோடு நான் இருக்கையில், உலகையே மறக்க செய்கிறாய் ...
என் நட்புகள் எல்லாம் எனக்கான உன் உறவை வெறுத்தபோதும் உன்னை ஏனோ விட்டு என்னால் விலக முடியவில்லை ... உனக்கும் எனக்குமான நம் உறவு நட்பினை விட அதிகமாகிவிட்டதை நான் உணர தொடங்கினேன் ... நான் விழிக்கும் போது என்னுடனே எழுந்து நான் துயில் கொண்டாலும், எனக்காக நீ விழித்திருந்த காலங்கள் அதிகம் ... உன்னை என் மடி தாங்கும் காலங்கள் ...
என்னதான் நான் உன்னுடனான உறவை குறைத்து கொள்ள வேண்டுமென என் அறிவு அறிவுரை சொன்னாலும் ... மனமோ உன் மடியினில் மயங்கி கிடப்பதென்னவோ நிதர்சன உண்மைதான் ... அறிவுக்கும் மனசுக்கும் சண்டை வந்தது .... மனசே வெற்றி பெற்றது என் வாழ்வில் ... உன் விசயத்தில் மட்டும் ....
தேடி தேடி உன்னை கண்டேன் .... நமக்கான நம் உறவு மூன்று வருடம் என எண்ணி சொல்லிவிட முடியாது ... என் கனவுகளில், மன தினவுகளில் நீ நுழைந்து பதிமூன்று வருடமல்லவா ஆகிறது ??? உன்னை கைகொண்டு நான் வீறு நடை இட்ட முதல் நாள் இன்றும் என் மனதில் ... அன்று பெய்த ... அதே மழை சாரல் வீச வைக்கிறது ... இன்ப துன்பங்களில் இணை பிரியாத உன் உறவு ... இன்று மட்டுமில்லை ... என்றென்றும் தொடர விரும்புகிறேன் ....
.
.
.
.
.
.

.
.
.
.
.

(ரொம்ப யோசிக்காதீங்க ..... பயங்கரமா, எதிர்பார்ப்புகளோடு படிச்சு முடிச்சிடீங்களா ? இந்த உறவு யாருன்னு தெரியனுமா ? யார் கிட்டயும் சொல்லாதீங்க ... அடிச்சு கேட்பாங்க ... சொல்லிடாதீங்க .... காத கொடுங்க பார்க்கலாம் .... ஏன்னா யாரும் கேட்டுட கூடாது பாருங்க ............................................................................................ 

(Its dedicated to my beloved HP )

BY

GUNA



உன் நட்பு .....


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஏன் என்று தெரியாமல்

நம்மிருவருக்கும் பல பல சண்டைகள்...

சிரிக்கவில்லை...

பேசவில்லை...

சமாதானம் இல்லை...

மன்னிப்பும் இல்லை...

எப்படி எப்படியோ ... இருவரும்
பேசியும் விட்டோம் ...

பின்னொரு நாளில் வந்த ஒரு
ஏகாந்த பொழுதில் ,

மெல்லிய குரலில் சொன்னாய் ...
"இன்று போல் என்றுமே இருந்துவிடு என்னோடு"

வாழ்வினில் தொலைந்து போககூடாத
பொக்கிஷம் நீயல்லவா என் தோழி ...

அடிக்கடி காணாமல் போனாலும்
நொடிக்கொருமுறை வந்துபோகிறாய்... நம்
நட்பென்னும் நாட்குறிப்பேடுகளில்...
வருடங்கள் மாறினாலும்,
வாடாத வசந்தமாய் மாறாமல் நீ மட்டும் ....

குணா ...



12/24/13

என் ஜெகமெல்லாம் நிறைந்தவளிடம் ஒரு பகிர்வு....

ஜெகமெல்லாம் நிறைந்தவளே.... உன்னுடனான எந்தன் உறவு ... உலகில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைக்க தோன்றுகிறது... தினம் தினம் அதிசயமாகவே தோன்றுகிறாய்... படிக்க படிக்க புதிதாக இருக்கும் புத்தகம் போல நீ... கோடி கணங்கள் உன்னோடு கடந்தாலும் உன்னில் கற்று கொள்ளவும், பெற்று கொள்ளவும் ஏராளமாக வைத்திருப்பாய்.... உன்னை புரிந்து கொண்டது போலவும் இருக்கும்... புரியாத புதிர் போலவும் இருக்கும்... இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு உன்னுடையது... உனக்கான எல்லைகள் மிக கடினமானவைகள்... உன் அனுமதியின்றி உள் நுழைய முடியாது... அதை போலவே உன்னிடம் அனுமதி பெற நெருங்குவதும் அவ்வளவு எளிதல்லவே ???

தன்னம்பிக்கை கற்று தந்தாய்... உன் செல்ல திட்டுகள் கூட எதையாவது கற்று தரும்... அன்று முதல் இன்று வரை 'குரு' பரிணாமம் மட்டும் மாறவே இல்லை உன்னிடம்... உன்னிடமிருந்து கற்று கொள்ள ஆயிரமாயிரம் இருக்குமே தவிர... உனக்கு கற்று தருவது என்பது ஒரு நாளும் நடக்க முடியாத ஒரு செயல்... நீ ஏற்று கொள்ள போவதும் இல்லை...

குழந்தையென உன் உறவு... குதூகலத்தை தருவதில் என்றும் எனக்கு குறை வைத்தது இல்லை ... அமுத சுரபி என ... நீயும் எதை செய்தாலும் கோபம் வருவதில்லை ... வருத்தங்கள் பல உண்டு... சிறு குழந்தை செய்யும் தவறுகளுக்கு கோப பட முடியுமா???

உன்னிடம் எந்த  எதிர்பார்ப்பும் இல்லை என சொல்ல முடியாது... ஏனெனில் , உன்னிடம் எந்த எதிபார்ப்பும் இல்லை என்று சொல்ல நீ என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பேராசை அனைத்தும் உள்ளது....

உனக்கான உலகம் மிக சிறியது... மிக மிக அழகானது... என்றும் எனக்கு ஒய்வு தரும் ஒரு குட்டி சொர்கமல்லவா ...

நாம் நம் வாழ்வினில் சந்திக்கும் அனைத்தும் விபத்துகள் அல்லவே ??? ஏதோ ஒரு காரணத்திற்கு மட்டுமே அனைத்து சந்திப்புகளும் நடைபெறுகிறது... நான் உன்னை சந்தித்ததும் அப்படிதான் என நம்புகிறேன்...

எத்தனை எத்தனை முரண்பாடுகள் நம் இருவருக்குள்... அத்தனையும் தாண்டி இன்றும் இனிதே இந்த பயணம் தொடருகிறது... இனி பயமில்லை... காலமெல்லாம் தாண்டி வல்ல்கை கடலின் கரையை தொட்டு விடும் நம் உறவு படகு... ஆனால் மனதில் சின்ன நெருடல்... சரியா தவறா தெரியாது..மனதில் சட்டென்று சிறு வலி தோன்றுகிறது... எனக்கான உன் நேரங்கள் ஏற்கனவே பகிர்ந்தளிக்க பட்டுவிட்டது... இனி ... கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒன்றுதான்... ஏன், என்னுடைய வேண்டுதலும் கூட... கனவும் கூட... கனவு கை கூடி வரும் போது சிறு வலி... இனி நீயும் வாழ்க்கை சக்கரத்தில் சுழல தொடங்கி விடும்போது நான் மறைந்து போகாமல் இருக்க வேண்டுமென.... உன்னிடம் சொல்லியது தான்... உரக்க கத்தியதுதான்...

"இன்று மட்டுமல்ல... என்றும் தொடரும்... எனது ஏகாந்த தொந்திரவுகள்"
                    
                                                                        இவள்





ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்....

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்.... அழுகை, ஆறுதல், அன்பு, என அனைத்திலும்... பெறுவதில் மட்டுமல்ல ... தருவதிலும் தாராளமான சுகமிருக்கிறது... சில இடங்களில் ஏமாற்றம் கூட வலியுடன் கூடிய சுகமாகவே இருப்பதுதான் அதிசயம் .... சில பிரிவுகளும் .... நடக்க போகும் நன்மைக்காக சில பிரிவுகளை வலிய ஏற்கும் போதும் வேதனையான சுகம் தான், நினைவுகளின் வடிவினில் ... 

இந்த சுகமான தருணங்களின் வரிசையில் முக்கிய இடம்.... "எழுதுவது - பகிர்வது ".... மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர, நல்ல நட்பினை தரும் இடம்.... எழுதுகோலுக்கும் காகித தாளுக்கும் இருக்கும் பரிசுத்த பகிர்வில் மனமெல்லாம் மயிலிறகாய் மாறி விடும் மாயம் இங்கு மட்டும் தான்.... வார்த்தைகளில் வெளிப்பட தயங்குவதெல்லாம் , புது காவிரி வெள்ளமென மடைதிறந்து கொட்டும் இடம் .... நம் மனதிற்கு நாமே நீதி வழங்கும் வழக்காடு மன்றம்.....

இதெல்லாம் தெரிந்திருந்தும் ... மிக பெரிய தவறென இந்த சொர்கத்தை மறக்க வேண்டிய சில பல சூழ்நிலைகள் .... இதுவே சரியான தருணம் என உணர்கிறேன் ...தவறுகளை திருத்தி கொள்ள .... இதோ வந்து விட்டேன் என் நட்பே.... உன்னிடமான என் உறவு என்றுமே நான் வருந்த விட்டதில்லை .... தவறு செய்து விட்டோமா ? என யோசிக்க அனுமதித்ததில்லை .... அத்தனையும் சரியாக அமைந்த பொழுது ஏது வருத்தப்பட நேரம் ???? உணர்ந்து விட்டேன் .... உன்னை கை கொண்டு விட்டேன் இப்போது .... உன்னை கண்டு பலர் பயப்படவும் செய்கின்றனர்... ஆனால் எனக்கு மட்டும் ஏனோ என்றும் மனதிற்கு மிக அருகினில்..... வந்து விட்டேன்.... இன்னும் 7 நாட்கள் மட்டுமே... சிறு வயதில், வங்கி வைத்த புது துணியை தினமும் தடவி பார்த்து மனம் குதூகலிக்கும்.... உடுத்த போகும் நாட்களுக்காக கனவுகளுடன் காத்திருக்கும்... இங்கும், இன்றும் அதே நிலை... உன் நினைவுகள் மேலோங்கி நிற்கிறது... நாட்களை நகர சொல்லி அவசர படுத்த தோன்றுகிறது... என்ன விந்தை உணர்வுகள்... இருப்பினும் இதும் சுகமாகவே இருக்கிறது...

புது வருட நாள் முதல் நம் பகிர்வுகள் ஆரம்பம் ...இனி எல்லாம் ஜெயமே ! நம்பிக்கையின் மறு உருவமாக, வேண்டியதெல்லாம் தந்து கொண்டிருந்த மாயாஜாலம் நீ.... ஆதலால் உரைக்கிறேன் .... இனி எல்லாம் ஜெயமே ....

இவள் 

இனியவள் .....


11/5/13

Without you ???

Dear...

You are the meaning of my life,


You are the dreams of my thoughts,


You are the lyrics of my feelings,


You are the literature of my silence,


You are the journey of my emotions,


You are the translation of my path,


You are the definition of my identity,


You are everything for me,


I am nothing without you...!



10/8/13

எத்தனை எத்தனை அழகு ...

உனக்கான என் நேரங்கள் 
மிக அழகானவை !

பெறுவதை விட 
தருவதில் உள்ள சுகம் போல !

காணாமல் கண் மூடி 
காத்திருக்கும் நொடிகள் போல !

மண் தழுவும் 
மழை வாசம் போல !

மலராமல் மலர்ந்திருக்கும் 
மலரின் நாணம் போல !

சின்ன குழந்தையின்
செல்ல சிரிப்பை போல !

தேர்ச்சிபெற்ற சிற்பியின் 
தேர்ந்தெடுத்த சிலை போல !

அந்திவானம் சாயும் போது  
சிந்தி சிதறும் வண்ணம் போல !

எத்தனை எத்தனை அழகு ...
அத்தனை அத்தனையும் போதவில்லையடி ,

உனக்கான என் நேரத்தின் 
அழகினை எடுத்து சொல்ல !!!


10/7/13


கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான் ....


உன்னில் நானாக இருந்து 
என்னில் நீயாக நடந்து முடிந்த 

காலம் இன்று சிரிக்கின்றது 
கண்சிமிட்டி தாண்டி போகின்றது ....

தவறுகள் மட்டுமே 
தாறுமாறாக தெரிகின்றது ...







குற்றங்கள் மட்டுமே ஏனோ 
சுற்றங்களுக்கு தெரிகின்றன ...

தட்டி கொடுத்த நிமிடங்கள் 
பட்டு போய்விட்டன ...

தெரிந்தே தவறு செய்தாலும்
பிரிந்து செல்ல முடியுமா?

தினம்தினம் ஆயிரம் வேஷங்கள் .... ஆனால் 
அத்தனையிலும் மாறாதது பாசங்கள் மட்டுமல்லவா? 

தென்றலென தேடிவரும் என் 
உள்ளம் உன்வாசலில் ....

கதவுகள் திறக்கவில்லைஎனில் 
காதோரம் சொல்லி செல்வேன் 
நமக்கான நம் நட்பின் கனவுகளை .... 


நடிக்கின்ற இந்த உலகத்தில் உன் 
துடிக்கின்ற இதயம் என்றும் 

மகிழ்ச்சியில் திளைத்திருக்க - என் 
வேண்டுதல்களை விட்டு செல்வேன் ....

தோழி ....., புரியாத புதிர் நீ !



இன்பம் - துன்பம்
இரண்டற கலந்தவள் நீ !

கண்ணீர் - களிப்பு
கலவை  நீ !

சண்டை - சமாதானம்
சரிவிகிதம் நீ !

ஏற்றம் - தாழ்வு
ஏகமாய் தருபவள் நீ !

விருப்பு - விஷமம்
விகிதாசரம் நீ !

நெருக்கம் - பிரிவு
நெஞ்சுருக்கம் நீ !

அயர்ச்சி - அரவணைப்பு
அடுத்தடுத்து அளிப்பவள் நீ !

குழப்பம் - தெளிவு
என்னுள் என்றும் நீ !










ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

ஜன்னலில் கொஞ்சம்
சன்னமான நிலவொளி !

நெஞ்சுக்கு அருகினில்
கொஞ்சும் கொலுசின் ஒலி !

அடடே

சொர்க்கம் தேடி நானும்
சொல்லாமலே வந்து விட்டேனோ ?

இந்திர ஜாலம்
இதயத்தில் மெல்லிய சலனம் ... என

அவள் பாத கொலுசின்
ஆட்டம் என்னை

எங்கோ கூட்டி செல்லுதே
ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் நிறைகிறதே ...

நிஜத்தில் நடந்தால்
நெஞ்சம் தாங்குமோ ???



10/5/13

சலசலப்பு...

மனம் கசிந்து 
கண்களில் தெறிக்கும் போது 
ஒரு  மெல்லிய சலசலப்பு ...
மனதிற்கு வெளியே ....
எட்டி பார்த்தேன் ...


உன் குறுந்தகவல் ...
இப்பொழுது 
பல புயல்களின் சலசலப்பு ...
மனதிற்கு உள்ளே ...

அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா ? ? ?



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் 

துளியாய் துளியாய் குறையும் 

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே 

தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும் 

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே 

இந்த காதல் வந்துவிட்டால் 

நம் தேகம் மிதந்திடுமே 

விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே 

ஒ ..ஒ ..ஒ ..



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


ஆசை என்னும் தூண்டில் முள் தான் 

மீனை நெஞ்சை இழுக்கும் 

மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட 

மனம் துடிக்கும் 

சுற்றும் பூமி என்னை விட்டு 

தனியாய் சுற்றி பறக்கும் 

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ 

புது மயக்கம் 

இது மாய வலை அல்லவா 

புது மோக நிலை அல்லவா 

உடை மாறும் நடை மாறும் 

ஒரு பாரம் என்னை பிடிக்கும் 


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா ??????????????????????????????????????????????????????????????????????????????????????????

7/29/11




தெரியாமல் இங்கு


மாட்டிக் கொண்டேனோ ?


தேடி தேடி


தொலைந்து போனேனோ ?


நித்தம் நித்தம்


நித்திய சுகம் !


நிலவொளி தென்றலில்


நெகிழ்ந்திருந்த காலம்!

எல்லாமே போயாச்சு !


வெட்டவெளி போலாச்சு !


ஆனால்,


தொடுவானம் கூட எனக்கு


தொட்டு விடும் தூரம் தான் !


தேவதை உன் நினைவால்


தேசமெல்லாம் வென்று வருவேன் !


தோழி உன் பாதத்தில்


தேடி வந்து சமர்பணம் செய்வேனடி !


@ குணா ...