, இனியவளின் இதய பகிர்வுகள் !: மாற்றங்கள்
Views

10/29/25

மாற்றங்கள்

29/10/2025

5.00 pm

 பிரபஞ்சத்தின் பரிசு 👇

தேவதையின் நேர்காணல் 😇

கணம் கூடி போனது

புடம் போடப்பட்டத்தின் விளைவு!

ஏன்? எதற்கு? எதிர்வினை என்ன?

மனதின் கணம் தாங்க

நித்தமும் நீ வேண்டும் இறைவா!

************

திகட்ட திகட்ட திளைத்தாச்சு

மூச்சு முட்ட வாழ்ந்தாச்சு...

இப்படித்தான் 

இனிக்க இனிக்க வாழ்ந்து

இதுதான் தருணமென

இவ்வாழ்க்கையை 

இசைந்து ஏற்றேன் 😍

பல சில பாடங்கள்,

சில பல சிதறல்கள்,

சிற்பமாக செதுக்க

மனசாட்சியின் மறுஉருவம் 🦋

முன் நின்று வினாயெழுப்ப - பதிலளிக்கா

முயற்சிக்க மறந்து நானும்

முழுசிலையென சமைந்திட....

தேவதைகளும் தேவதூதர்களும் 

தேடி படித்திருக்கிறேன்- இன்றோ 

இன்மையில் கண்டு,

தேகம் சிலிர்க்க நானும்...

ஏனோ, எனக்கென 

என்முன்னே ஏனோ??????

என்னில் தொடாத பக்கங்கள்

எதும் இன்னுமுள்ளதா?

பல பரிணாமங்களில்

உங்கள் கண்கொண்டு

எந்தன் வாழ்வினை பார்த்தேன் 💥

இன்னும் இன்னும் 

தேடி கொண்டிருக்கிறேன்.....

இன்னதென இல்லாமல்,

இங்கும் அங்குமன்றி,

இன்னும் இன்னும் என்னுள்........

பரிணாம வளர்ச்சியென

பரிசுத்தம் செய்ததிற்கு

நன்றி என நவிழ்தல்

பொருந்தாது பின்

நானென்ன செய்யின்????


மனதில் கணம் கூடி நானும்

பேச்சற்று நின்ற தருணம்!

****************

ஏன் ஏன் ஏன் என

என் மனம் 

ஏன்னிந்த அரட்டல்?

*****************

5.55 pm

Just now




Seeing good things....


Only notice my own feelings...




Only Compliments...


No complaints.... 




Focus 👇


My


Words = Thoughts = Feelings


Take home 👆


.......


“Now is the perfect time to turn my life around and become the person I’ve always wanted to be.”


**************



No comments:

Post a Comment