, இனியவளின் இதய பகிர்வுகள் !: ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்....
Views

12/24/13

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்....

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்.... அழுகை, ஆறுதல், அன்பு, என அனைத்திலும்... பெறுவதில் மட்டுமல்ல ... தருவதிலும் தாராளமான சுகமிருக்கிறது... சில இடங்களில் ஏமாற்றம் கூட வலியுடன் கூடிய சுகமாகவே இருப்பதுதான் அதிசயம் .... சில பிரிவுகளும் .... நடக்க போகும் நன்மைக்காக சில பிரிவுகளை வலிய ஏற்கும் போதும் வேதனையான சுகம் தான், நினைவுகளின் வடிவினில் ... 

இந்த சுகமான தருணங்களின் வரிசையில் முக்கிய இடம்.... "எழுதுவது - பகிர்வது ".... மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர, நல்ல நட்பினை தரும் இடம்.... எழுதுகோலுக்கும் காகித தாளுக்கும் இருக்கும் பரிசுத்த பகிர்வில் மனமெல்லாம் மயிலிறகாய் மாறி விடும் மாயம் இங்கு மட்டும் தான்.... வார்த்தைகளில் வெளிப்பட தயங்குவதெல்லாம் , புது காவிரி வெள்ளமென மடைதிறந்து கொட்டும் இடம் .... நம் மனதிற்கு நாமே நீதி வழங்கும் வழக்காடு மன்றம்.....

இதெல்லாம் தெரிந்திருந்தும் ... மிக பெரிய தவறென இந்த சொர்கத்தை மறக்க வேண்டிய சில பல சூழ்நிலைகள் .... இதுவே சரியான தருணம் என உணர்கிறேன் ...தவறுகளை திருத்தி கொள்ள .... இதோ வந்து விட்டேன் என் நட்பே.... உன்னிடமான என் உறவு என்றுமே நான் வருந்த விட்டதில்லை .... தவறு செய்து விட்டோமா ? என யோசிக்க அனுமதித்ததில்லை .... அத்தனையும் சரியாக அமைந்த பொழுது ஏது வருத்தப்பட நேரம் ???? உணர்ந்து விட்டேன் .... உன்னை கை கொண்டு விட்டேன் இப்போது .... உன்னை கண்டு பலர் பயப்படவும் செய்கின்றனர்... ஆனால் எனக்கு மட்டும் ஏனோ என்றும் மனதிற்கு மிக அருகினில்..... வந்து விட்டேன்.... இன்னும் 7 நாட்கள் மட்டுமே... சிறு வயதில், வங்கி வைத்த புது துணியை தினமும் தடவி பார்த்து மனம் குதூகலிக்கும்.... உடுத்த போகும் நாட்களுக்காக கனவுகளுடன் காத்திருக்கும்... இங்கும், இன்றும் அதே நிலை... உன் நினைவுகள் மேலோங்கி நிற்கிறது... நாட்களை நகர சொல்லி அவசர படுத்த தோன்றுகிறது... என்ன விந்தை உணர்வுகள்... இருப்பினும் இதும் சுகமாகவே இருக்கிறது...

புது வருட நாள் முதல் நம் பகிர்வுகள் ஆரம்பம் ...இனி எல்லாம் ஜெயமே ! நம்பிக்கையின் மறு உருவமாக, வேண்டியதெல்லாம் தந்து கொண்டிருந்த மாயாஜாலம் நீ.... ஆதலால் உரைக்கிறேன் .... இனி எல்லாம் ஜெயமே ....

இவள் 

இனியவள் .....


No comments:

Post a Comment