, இனியவளின் இதய பகிர்வுகள் !: நீ என்னை விட்டு விலகுவதுமில்லை . . .
Views

8/20/12

நீ என்னை விட்டு விலகுவதுமில்லை . . .





நீ என்னை விட்டு விலகுவதுமில்லை
என்னை கைவிடுவதுமில்லை...
விளையாடி களைத்து வருவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
உலகத்தின் உருட்டலில்
உருண்டோடி கண் மயங்குவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
சவால்தனை ஏந்தி விட்டேன் ,
சடுதியிலே முடித்து விடுவேன் ... அன்று
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...

No comments:

Post a Comment