, இனியவளின் இதய பகிர்வுகள் !: August 2012

8/27/12

என்று மாறும் இந்த மாற்றம் ?

 

 

 

அன்னை என என்மேல் 

அன்பு மழை பொழிந்தவள் - இன்று 

அக்னி என சுடுகிறாள் !


சகோதரி என என்னிடம் 

சகஜமாய் பழகியவள் - இன்று 

சாபங்கள் பல தருகிறாள் !


தோழி என எனக்கென்றும் 

தோள் தந்தவள் - இன்று 

தொலைந்து போக சொல்கிறாள் !


மாற்றங்கள் என்றும் 

மாறிவிடும் தானே ? - என்று 

மாறும் இந்த மாற்றம் ?

நாயகனே சொல்லிடுங்கள் ...


வார்த்தைகள் வரவில்லை 

வருந்தி எழுத மனமில்லை !

வேதனைகள் தீர்ந்திடுமோ ?

வசந்தங்கள் திரும்பிடுமோ ?

நாயகனே சொல்லிடுங்கள் ... எங்கள் 

நாயகனே சொல்லிடுங்கள் . . .


சொல்லடி சிவசக்தி !



நெஞ்சமும் ஏனோ 
கொஞ்சம் விம்முதே ...
தடையிங்கு ஏதுமில்லை 
விடையுமிங்கு காணவில்லை ...
சோதனைகள் தீர்ந்திடுமோ 
வேதனைகள் மறைந்திடுமோ ?
சொல்லடி சிவசக்தி ! - நீயும் 
சொல்லடி சிவசக்தி !


8/26/12

தரிசனம் !



வருவாய் நீயும் ஒருநாள் - மெல்ல 

வசந்த தென்றலென !

தருவாய் நீயும் ஒருநாள் - உன் 

வருகை ஒரு வரமென !

வரும் நாளும் எதுவோ ? - தரிசனம் 

தரும் நாளும் எதுவோ ?


சொல்லாயோ சோலைக்கிளி ?







சலசலப்புகள் இன்றி 
சற்றே நானும் போகையிலே 

பட்டென்று கல்வீசி 
சட்டென்று கலைத்துவிடுகிறாய்  !

அமைதியை நானும் 
அனுமதிக்க விட்டாலென்ன ?

தேவையெனில் என்னிடம் 
தட்டிகேட்க தயக்கமென்னவோ ?

தேவையின்றி என்மனதை 
எட்டிபறித்து சென்றதேன்னவோ ?

சொல்லாயோ  சோலைக்கிளி ? நீயும் 
சொல்லாயோ  சோலைக்கிளி ?


8/25/12

என்னசொல்ல?





மருகி மருகி 
உருகி உருகி
சருகு சருகாய் 
எரிந்து எரிந்து 
கருகிக் கருகி 
சரிந்து சரிந்து 
விரக்தியில் செல்கிறது 
விடியாத வாழ்வு.. .
வசந்தமே நீ இன்றி . . .

8/24/12



இன்பமோ துன்பமோ ....
இருந்துவிட்டு போ ...
இசையோடு இசையாக ...
இனிவரும் நாட்களில் ...
இதயத்தின் துடிப்புகளில் ....

8/20/12

நீ என்னை விட்டு விலகுவதுமில்லை . . .





நீ என்னை விட்டு விலகுவதுமில்லை
என்னை கைவிடுவதுமில்லை...
விளையாடி களைத்து வருவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
உலகத்தின் உருட்டலில்
உருண்டோடி கண் மயங்குவேன்
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...
சவால்தனை ஏந்தி விட்டேன் ,
சடுதியிலே முடித்து விடுவேன் ... அன்று
உன் மடியில் தலை சாய்க்க
ஒரு இடம் கொடு அது போதும்...

8/13/12


8/9/12






மெதுவா பாடு எதையாவது 

பனி போல நீங்கும் சுமையானது . . .

மனசோடு உள்ளத பேசு என்னோடு குறையும் பாரம்....

விலகாத அன்புடன் சேந்திருக்கணும் நீயும் நானும் . . .





8/8/12

புரிவதுமில்லை தெரிவதுமில்லை !






குள்ளநரிகளின் சிந்தனைகள் 

சிறிதும் புரியாமல் 

சின்ன பூவும் 

குற்றபத்திரிக்கை வாசிக்கிறது !







உரைப்பது உண்மைதானடி ! ! !



சின்னஞ்சிறு கண்ணே . . . 
    சீற்றம் கொள்ளாதே . . . 
          சிதறி போகாதே. . .

சினம் தீர்ந்து 
        குணம் திருந்தி பார்த்தால் - பலர் 
         மனம் புரியும் . . . 

வாருங்கள் வசை பாடிட. . . வரவேற்கிறேன் ! ! !


உளிகள் படாத கற்கள் உதவுவதில்லை 

உரு பெறுவதும் இல்லை

சிதைக்க பாருங்களேன் 

 ! ! ! சிற்பமாகிவிட்டு போகிறேன் 



8/6/12

வாழ்க்கை ...

 
 
 
வாழ்க்கை ... பார்க்கும் பார்வையில் மட்டும் உரு பெறுவதில்லை . . . எங்கோ பிறந்து எங்கெங்கோ சுற்றி இந்த நொடி ஒரு இடத்தினில் . . .இது நிரந்தரமா ? கண்டிப்பா இல்லைதாங்க ? நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக எத்தனை மாற்றங்கள் . . . மாற்றங்கள் மட்டுமே மாற்றமின்றி ஏனோ நாம் வாழ்க்கை நதியில் . . . அனைவரும் இறுதியில் நதி கடலில் கலப்பது போல மண்ணைதானே போய் சேர போறோம் . . . நடுவினில், எத்தனை எத்தனை நாடக மாற்றங்கள் . . . உறவுகளின் உணர்வு கூச்சல்கள் . . . ஆனால் அத்தனை பிறப்புக்கும் பொருள் உண்டென்றால் . . . அத்தனை பெரும் பிறப்பின் பயனை பெற்று செல்கின்றனரா? உணர்வுகளின் உறுதி பிடியில் சிக்கி சிதைந்து போகும் பல . . . அத்தனை உறவுகளும் அப்படியும் அல்லவே . . . உணர்வினில் கலந்தவை சில . . . உயிரினில் உறைந்தவை சில . . . சிரிக்க வைக்கும் சில . . . சிதற வைக்கும் சில . . . சிந்திக்க வைக்கும் சில . . . சிலிர்க்க வைக்கும் சில . . . கனவினை கசிந்தவை சில . . . இப்படி சொல்லிட்டே போகலாம்தானே ? இத்தனையும் சேர்ந்த கலவையும் இருக்கதானே செய்கின்றன . . . எங்கோ படித்தது எல்லாம் ஏதோ சமயங்கள் நினைவுகளில் பரிகசிப்பது போல ; எப்போதோ கடந்து சென்றவர்களின் கால் தடயங்கள் நெஞ்சியில் கண்ணடித்து கதைக்கும் . . . உண்மைதானங்க ? என்னங்க பேச்சு இல்ல ? ஓ உங்க மனசுக்குள்ள யாரோ கண்ணடிச்சு கதைகரான்களோ ?
ஓகே . . . பேசி முடிச்சாச்சா ? வேற என்னங்க ? வாழ்க்கை என்ன என நானும் இப்படிதாங்க தேடி தேடி ஏதோ நினைவுகள் என்னும் புதையல்ல புதைஞ்சு போய்டறேன் . . . உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க . வாழ்க்கை என்றால் என்ன ? சிலர் பணம் தான் வாழ்க்கை என்கின்றனர் . சிலர் அன்பு தான் வாழ்க்கை என்றும், சிலர் விட்டு கொடுத்தல் தான் என்றும், சிலர் உணவு உறக்கம் தான் என்றும் ...... ஏதோதோ சொல்லறாங்க .... உண்மைய சொன்னா சிலர் . . .
விடுங்க . . . தெரியாத சிலவற்றை தெரிந்ததாக பேசி எழுதி நேரத்தை வீணாக்காதீங்க !
தெரிந்ததை வைத்து தெளிவா வாழ பார்க்கலாமே !
உண்மைதானுங்க ? ? ?