, இனியவளின் இதய பகிர்வுகள் !: September 2012

9/22/12

என்னவென்று நான் சொல்ல?

என்னவென்று நான் சொல்ல?

 



9/11/12

எனக்கான நீ !

 

 

 

எழுத முடியாத வார்த்தைகளும் 

சொல்ல முடியாத வலிகளும் - தினமும் 

கண்ணீராய் கரைகின்றன !

 

காரணங்கள் ஊமையாகி 

காட்சிகளும் நரகமென 

விடியாத இரவுகள் நீள்கின்றன !.

 

சட்டென்று என்  தேவதை 

பட்டென்று கரம் தந்தாள் !

   

சாலையெல்லாம் பூக்களாகி 

வார்த்தையெல்லாம் பாக்களாகி 

சொர்க்கமென மாற்றினாள் ! - என் 

உலகை உற்சாகமாகினாள் !

 

தன்னோடு அணைத்துக்கொண்டாள்!

தாயென்று  வாரிக்கொண்டாள் !

குழந்தையென மாறி போனேன் !

குதூகலமாய் நானும்  சென்றேன் !






என்னவளின் சிறு புன்னகையால் ???




காலை  வானம் ஏன் 
கன்னிப்பெண் என 
கன்னம் சிவக்கிறது ?
ஓ 
கண்மணியவள் 
கண்திறந்து 
மெல்ல சிரித்ததாளோ ?



9/4/12

என்னவென்று எடுத்துசொல்ல ?



நிலவே ,

உனக்கான என் சமர்ப்பணம் !

என்னவென்று எடுத்துசொல்ல ?

ஏதோ ஒரு தயக்கம் !

ஒவ்வொரு நிமிடமும் 

ஓராயிரம் நினைவலைகள் !


 

வாழ்வுதனில் நீயிருந்தால் 

வருத்தங்கள் இங்கில்லை !

கருத்தினில் நீயிருந்தால் 

கனவுதனில் கலக்கமில்லை !

நன்றியடி நாயகியே ,

நாளும் நானுரைப்பேன் !

 



9/3/12

வந்துவிடு என் நிலவே !

 

 

 

உன் கோபங்கள் குறையாதோ ?

எனக்கான சாபங்களும் தீராதோ ?

 

பூக்களோடு காத்திருக்கிறேன் ,

பூவரசி உனக்காக !

 

தோரணமிட்டு காத்திருக்கிறேன் ,

தோழியே உனக்காக !

 

சாரலென  காத்திருக்கிறேன் ,

சர்வமே உனக்காக !

 

மலரென காத்திருக்கிறேன் ,

மான்விழியே உனக்காக !

 

ஏக்கங்களுடன் காத்திருக்கிறேன் ,

அன்னையே உனக்காக !

 

கண்ணீருடன்  காத்திருக்கிறேன்,

கண்மணியே உனக்காக !

 

உணர்வுகளற்று காத்திருக்கிறேன் ,

உயிரே உனக்காக !

 

வந்துவிடு என்  நிலவே !

வானமென காத்திருக்கிறேன் !


நம்பிக்கையுடன் ....

இவள்...






நொடிதோறும் காத்திருப்பேன் . . .




வசந்தமென வந்தே போகிறாய் 

சொந்தமென சொல்லி செல்கிறாய் !


தென்றலென தேடி வீசுகிறாய்

பாசமென சாரல் சிந்துகிறாய் !


அன்னையென  அன்பு காட்டுகிறாய் !

சகோதரியென சர்வமும் நிறைந்துவிடுகிறாய் !


தேவதையே நீ யாரோ?

தேடிவந்தவளே நீ யாரோ ?


நொடிதோறும் காத்திருப்பேன் . . . வாயிலின் 

படித்தோரும் பூத்திருப்பேன் !


9/2/12

உண்மைதானே நீ உரைத்தது !

உன் தோழி உன்னை பற்றி அத்தனையும் அறிந்தவள் . . . ஆனால்
உன்னை அவளை விட நேசிப்பவள் உலகினில் யாருமில்லை !

உண்மைதானே நீ உரைத்தது !


         

இப்போதும் காத்திருக்கிறேன் . . .

வாழ்க்கை என்றும் ஒரே மாதிரி இருப்பதில்லை ! மனம் நிறைய மகிழ்ச்சியோடும், இதழ் நிறைய புன்னகையோடும் ... உலகினை வலம் வந்த காலங்கள் . . . உவகையே உருவாக ஊர் சுற்றிய தருணங்கள் . . .

அவளின் வருகை .  .  . அத்தனை இன்பங்களையும்  இரட்டிப்பு செய்தது . . . இஷ்டபட்டது எல்லாம் என்னை விட்டு சென்று விடும் வாழ்வதனில் . . . அவளின் முன்னுரை முடிவுரை ஆகாமல் இருக்க . . . கஷ்டப்பட்டு நடித்தேன் இஷ்டமில்லையென . . . விதியினை மதியால் வெல்ல முடியாதோ ? சதி செய்து விதியதனை வெல்ல நினைத்தேன் . . . வென்றது உண்மைதான் ... ஏன் மதியோ... நான் செய்த சதியோ அல்ல. ஆம். வென்றது விதியே . . . நான் போட்ட கணக்குகள் கண்ணீரைத்தான்  தந்தன ! அவளின் அன்பு அத்தனையும் மாற்றியது. என்னையும் உட்பட . . .

யாருக்கும் அடங்காத சிங்கமென திரிந்த என்னை . . . அவளின் கோபங்கள் . . . அடியோடு மாற்றி போட்டது . . . திமிரும் கர்வமும் அடங்கா தன்மையும் என்னுடைய கண்ணீரோடு கரைந்து விட்டது . . . வேண்டும் வேண்டும் என என்னை துடிக்க வைத்து . . . வேண்டாம் வேண்டாம் என விலகி நிற்கிறாள் என் வாழ்வில் எனக்கென வந்த என்  தேவதை . . . காற்றோடு தினம் , மல்லிகை மலர் வாசமாய் கலந்திருப்பவளே . . . உன்னோடு நான் எழுதிய முடிவுரைதனை ஏன் முன்னுரை என மாற்றினாய் ? கஷ்டங்களுக்கு  தானே இஷ்டமில்லாமல்  வாழ்ந்திருந்தேன் . இன்று ? தென்றலென வந்து ஒருத்தி புயலென நிற்கிறாள் ! பழி பட்டம் தாங்கி, வலிகளோடு நிற்கிறேன் . . . பிழை பொறுத்து என்னை ஏற்றுக்கொள் . . . வந்து விடுகிறேன் உன்னோடு . . . என்னை நம்பி இருக்கும் 3 ஜீவன்களை என்ன செய்ய ? கடமையும் கட்டி போட, நெஞ்சின் வலிகளோ நெட்டி தள்ள . . . சுவாசம் கூட சுமையாக தெரிகிறது !

என்  புலம்பல்களும், வேதனைகளும் உன்னையன்றி யாரிடம் உரைபேனடி ?

இந்த வேதனைகள் எல்லாம் வேண்டாம் என்றுதான் நீயும் வெறுத்து போனாயோ ? போகும் பொது கூட, நான் வருந்த கூடாதென மறைத்து விட்டு மறந்து போனாயடி . . . இன்று பார் . . . நான் படும் வேதனைகளை . நானாக தேடி கொண்டது தான் . இந்த வேதனைகள் ஏன் வாழ்வில் வரும் என உனக்கும் அன்று தெரிந்திருந்தால் என்னையும் அல்லவா உன்னோடு கூட்டி சென்றிருப்பாய் . காலம் கடந்தாலும், கருத்துகளில்  கலந்திருப்பவளே ! நேரம் கடந்து விடவில்லை . இப்போதும் காத்திருக்கிறேன் . . . கூட்டி சென்று விடு...

இஷ்டமான கஷ்டங்கள் !

சொல்லவும் தெரியவில்லை
ஏற்கவும் முடியவில்லை !

வேண்டாம் இந்த வேதனை
உயிர் வாழ்வதே சோதனை !

என்று தீரும் இந்த கஷ்டங்கள்
வாழ்வதற்கு இல்லை துளியும் இஷ்டம் !




9/1/12

தயக்கமுடன் காத்திருக்கிறேன் !



தவறுகள் உணர்ந்துவிட்டேன்
தண்டனைகள் ஏனோ ?

தண்டனைகள் தந்தபின்பு
தாவி வந்து வாரியணைக்கும்

தாயவள் வரும் நாளுமெதுவோ ?
 தயக்கமுடன் காத்திருக்கிறேன் !