கண்மணி இன்று
கருத்துடன் தொடங்கிடும்
காரியம் வெற்றியடைய...
நிலவின் பயணம்
நிதானமாய் மெல்ல
நினைத்ததை அடைந்திட ...
தேவதையின் தேடல்
தேடியது கைகிடைத்து
தேகம்சிலிர்த்திட ...
மலரவள் மனதில்
மலர்திட்ட கனவுகள்
மறுபடியும் நனவாகிட ...
மையிட்ட கண்ணும்
செய்யிட்ட உதடுகளும்
பையன மலர்ந்திட . . .
வெற்றிதனை நீ சுமந்து
வீறுநடை நீ பயில
சற்று தொலைவினில் - நானும்
கண்கொண்டு ரசிப்பேன் ...
சுட்டெரிக்கும் சூரியனை
பட்டு பூவாய் நீயும்
பாதம் கீழ் நசுக்கிடு....
ஊர்கதைகள் எதுவும்
உனக்கு வேண்டாம் ...
உன் வெற்றி கதைதனை
ஊராரை கதைக்க செய்...
தாய் தந்தை கனவுகளை
தருணமெல்லாம் நீ நினைத்து
மெல்ல நடை பயிலு... என்
செல்ல கண்மணியே ...
வேதனை தானடி
சாதனையின் இறுதிகட்டம் ?
விரும்பி ஏற்றுக்கொள்
விருப்பம் நிறைவேறும் ...
வெற்றிதனை எட்டிபிடிப்பாய் .... உன்னை
சுற்றியுள்ளோர் நிமிர்ந்து பார்க்க ...
காட்சிகள் மறந்து
கருத்தினை குவித்து
கனவுகள் கோடி
கைகொள்வாய் வாடி . . .
தூக்கம் உனக்கு துச்சமாகட்டும் . . .
துக்கம் உன்னிடம் அச்சம் கொள்ளட்டும் . . .
வெற்றி உனது இலக்காகட்டும் ...
வீரம் உனது பலமாகட்டும் . . .
கடின உழைப்பு
என்றும் தந்திடும்
காரிய வெற்றி உனக்கு.....
தேவனை முன் நிறுத்தி
தைரியமாக நடந்துசெல் ...
வெற்றி உனக்காக
மாலையுடன் காத்திருக்க ....
தயக்கமென்ன என் தங்கமே ...
தயாராகிவிடு பயணத்திற்கு ...
வசந்தமும் உன்வாழ்வின்
வாசற்படியில் காத்திருக்க
உழைப்பென்னும் தாழ் கொண்டு
உள்ளே வரவேற்றிடு.....
கவனம் சிதறாமல்
காட்சி மாறாமல்
கனவினை கைகொண்டு
காலமெல்லாம் இன்புற்றிரு ....
புன்னகை பூத்திட - நீ
புது பூவென மலர்ந்திட
தேவதையென பவனிவர
தேன்கனி என உன்
தேடி வரும் வாழ்க்கை இனித்திட ....
காத்திருக்கும் நாற்பது நாட்களும்
கடவுளுக்கு நோன்பென நீயும் போராடி
கனவுகளை வென்றிடுவாய் !
பிறந்துள்ள புது குழந்தைஎன
இதழ் சிரிக்கும்
இனி வரும் புத்தாண்டில்,
உன் நிம்மதி பெருமூச்சினில்,
ஊரிலுள்ள பூக்களெல்லாம்
உற்சாகமாய் மலர்ந்திடும் ....
நம்பிக்கையுடன்
நாளும் உன்
நலம் விரும்பி !