, இனியவளின் இதய பகிர்வுகள் !: என்று மாறும் இந்த மாற்றம் ?
Views

8/27/12

என்று மாறும் இந்த மாற்றம் ?

 

 

 

அன்னை என என்மேல் 

அன்பு மழை பொழிந்தவள் - இன்று 

அக்னி என சுடுகிறாள் !


சகோதரி என என்னிடம் 

சகஜமாய் பழகியவள் - இன்று 

சாபங்கள் பல தருகிறாள் !


தோழி என எனக்கென்றும் 

தோள் தந்தவள் - இன்று 

தொலைந்து போக சொல்கிறாள் !


மாற்றங்கள் என்றும் 

மாறிவிடும் தானே ? - என்று 

மாறும் இந்த மாற்றம் ?

No comments:

Post a Comment