, இனியவளின் இதய பகிர்வுகள் !: இவள் இனியவள் . . .
Views

9/11/11

இவள் இனியவள் . . .


மாயக் கண்ணனோ ?
மழை
மேக வண்ணனோ ?

இதயத்
திருடனோ ?

இருவிழி
நிறைந்தவனோ ?

உணர்வில் கலந்தவனோ ?

உயிரினை
உருக்கியவனோ ?

இசையென
பிறந்தவனோ ?

இமைதனில்
சேர்த்தவனோ ?

சிங்காரச்
செல்வனோ ?

சிந்தனை
மிகுந்தவனோ ?

இந்திரனின்
இனத்தவனோ ?

சந்திரனின்
குணத்தவனோ?


வீரத்தில் வில்லாலனோ?
வார்த்தையில் வல்லவனோ ?
சிவகோபம்
படைத்தவனோ ?

சிறுபுன்னகையில்
மயக்குபவனோ ?

எனை
வெல்பவனோ?

எங்கிருந்து
வருவானோ ?

கண்
மூடி காத்திருக்கிறேன் ,

கரம்
சேர காத்திருக்கிறேன் ,

மனம்
கலக்க காத்திருக்கிறேன் ,

மணம்
புரிய காத்திருக்கிறேன் !


பாசமுடன்

இவள்

இனியவள்
. . .

No comments:

Post a Comment