, இனியவளின் இதய பகிர்வுகள் !
Views

9/9/11





சில நேரங்கள் ... பல தருணங்கள் ...

சிதறிய
சிரிப்புகள்... சிந்தனை தவங்கள்...

நித்தம்
நித்தம் தேடுகிறேன் ...

நிச்சயம்
கிடைக்காது - என
நிருபணமான பின்பும் ...
உன்னோடு
ஊர் சுற்றி

உலக
கதைகள் பேசி

தோள்மீது
கைபோட்டு

மடிமீது
தலை வைத்து

நாம்
கடந்து விட்ட காலங்கள்

நாம்
நினைத்தாலும் வராது தோழியே ...

நினைவுகள்
சுமந்து
கனவுகளை வெல்வோம் ...

இவள் நட்புடன் உன்
குணா...

No comments:

Post a Comment