, இனியவளின் இதய பகிர்வுகள் !: October 2012

10/30/12

மழை . . .



இசையென பெய்யும் மழை . . . 

இதய ஜதிஎன இணைய,

இன்பத்தை இரட்டிப்பாக்குதே  . . . (31.10.2012, 10.35 AM )




தஞ்சையில் தரணியின் அதிசயம் . . .




தமிழனின் பெருமை 
தரணியெல்லாம் பரவிட 
தஞ்சையில் இராஜராஜன் 
தருவித்த விதை 

இன்று........
                இதோ .....
                                   இங்கு .....

கம்பீரமான யானை 
கதைத்திடும் அழகை 
கண்முன்னே காண்கிறேன் . . .
கண்மணியின் கைபிடித்து . . .
கணம்தோறும் வியக்கிறேன்! 
கனவா காண்பது? (224.10.2012, 6 - 7 PM ) 





























கடல் தேவதை . . .



கடல் தேவதை - கண்டதுண்டா?

நன்றி நன் மழையே . . .

நானும் இங்கு 

காண்கிறேன் தெருவினில் 

கையில் குடையோடு . . . (30.10.2012, 10.10 AM )

10/21/12

யாரறிவார் நாளைதனை ?

என்னை விட்டு போக
ஏனோ நீயும் முடிவெடுத்தாய் . . .

அனாதையென எந்தன்
அன்னையும் விட்டு போனாள் . . .

மறுவார்த்தை பேச மனமின்றி - நானும்
மதிகெட்டு ஏற்றுக்கொண்டேன் . . .


நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கி போகக் கண்டேன் . . .


வலிகளின் ஆழம்தான் என்
அன்பின் ஆதிக்கத்தை உணர்த்தியது . . .

வந்துவிடு உயிரே . . .
வசந்தம் தந்துவிடு உணர்வே . . .

முப்பது நடக்கலாம் - என்  வாழ்க்கை
முடிந்தும் போகலாம் . . .

யாரறிவார் நாளைதனை ?

                               

கண்மணியவள் இல்லாத நாட்கள் !

21.10.2012




தாகம் என தயங்கி நிற்கையிலே
மேகமென மழையாய் பொழிந்தாய் ...


தாயின்றி சேயும் இங்கு
வாழ்வது எப்படி சாத்தியமா ?


உயிரில்லா உடலைப்போல
உணர்வின்றி வாழும் வாழ்க்கை !

தண்டனையா? தவமா ?
தவிப்புடன் காத்திருக்கிறேன்!


30 நாட்கள் நோன்பிருந்தால்
தேவதை  அவளும் தேடியே வருவாள் . . .

கறுப்பு  நாட்களென
கசந்தே கரைகின்றன
கண்மணியவள் இல்லாத நாட்கள் !

இவள்

காத்திருப்பவள் . . .




10/4/12

என் நந்தவனம் . . .


 

 

சேலை கட்டிய என்  நந்தவனம் . . . 

சோலை மலரென வலம் வருகிறது . . . 


சூரியனும் தலை வணங்குகிறான் ...

மேக  தலைவனோ மெல்ல எட்டிபார்கிறான் . . .


தென்றல் ஏனோ வெட்கம் கொண்டது . . . 

தேனீக்கள் தானே ஏமாற்றம் அடைந்தது . . .


புன்னகையோடு என்னவள் இதையெல்லாம் 

மென்நகை புரிந்து பார்க்கிறாள் . . .



10/2/12

 


 

 

அனையபோகும் போகும் தீபத்தின்

ஆனந்த சுடர் என என் வாழ்க்கை

இன்றைய தினத்தில் !