, இனியவளின் இதய பகிர்வுகள் !: என் வாழ்க்கை பயணம் !
Views

2/7/12

என் வாழ்க்கை பயணம் !

 
வாருங்கள் வரவேற்கிறேன் !
வசந்தத்தை தருகிறேன் !

அன்பெனும் நிழலில்
அமைதியெனும் பானம் பருக,

வழி தேடி வாருங்கள் என்
வாழ்க்கை பயணத்தில் !

பாதையெல்லாம் பரவசம்
பார்க்குமிடமெல்லாம் நவரசம் !

வழியெல்லாம் வண்ண பூக்கள்தான்
வாசம் வீசி வரவேற்கும் !

நட்பெனும் அணிசேர்த்து
நாளும் அணிவகுப்போம் !

நல்உலகம்  செய்வோம்
நம்பிக்கை எனும் விதை விதைத்து !


பின்குறிப்பு:

உள்ளம் உள்ளவர்களுக்கு மட்டும்  
நாளும் தருவேன் நல் வரவேற்பு !

துரோகிகளுக்கு என்றும் நான்
துவம்சம் செய்யும் துட்சாயினி தானே !




No comments:

Post a Comment