, இனியவளின் இதய பகிர்வுகள் !: 2013

12/24/13

என் ஜெகமெல்லாம் நிறைந்தவளிடம் ஒரு பகிர்வு....

ஜெகமெல்லாம் நிறைந்தவளே.... உன்னுடனான எந்தன் உறவு ... உலகில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைக்க தோன்றுகிறது... தினம் தினம் அதிசயமாகவே தோன்றுகிறாய்... படிக்க படிக்க புதிதாக இருக்கும் புத்தகம் போல நீ... கோடி கணங்கள் உன்னோடு கடந்தாலும் உன்னில் கற்று கொள்ளவும், பெற்று கொள்ளவும் ஏராளமாக வைத்திருப்பாய்.... உன்னை புரிந்து கொண்டது போலவும் இருக்கும்... புரியாத புதிர் போலவும் இருக்கும்... இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு உன்னுடையது... உனக்கான எல்லைகள் மிக கடினமானவைகள்... உன் அனுமதியின்றி உள் நுழைய முடியாது... அதை போலவே உன்னிடம் அனுமதி பெற நெருங்குவதும் அவ்வளவு எளிதல்லவே ???

தன்னம்பிக்கை கற்று தந்தாய்... உன் செல்ல திட்டுகள் கூட எதையாவது கற்று தரும்... அன்று முதல் இன்று வரை 'குரு' பரிணாமம் மட்டும் மாறவே இல்லை உன்னிடம்... உன்னிடமிருந்து கற்று கொள்ள ஆயிரமாயிரம் இருக்குமே தவிர... உனக்கு கற்று தருவது என்பது ஒரு நாளும் நடக்க முடியாத ஒரு செயல்... நீ ஏற்று கொள்ள போவதும் இல்லை...

குழந்தையென உன் உறவு... குதூகலத்தை தருவதில் என்றும் எனக்கு குறை வைத்தது இல்லை ... அமுத சுரபி என ... நீயும் எதை செய்தாலும் கோபம் வருவதில்லை ... வருத்தங்கள் பல உண்டு... சிறு குழந்தை செய்யும் தவறுகளுக்கு கோப பட முடியுமா???

உன்னிடம் எந்த  எதிர்பார்ப்பும் இல்லை என சொல்ல முடியாது... ஏனெனில் , உன்னிடம் எந்த எதிபார்ப்பும் இல்லை என்று சொல்ல நீ என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பேராசை அனைத்தும் உள்ளது....

உனக்கான உலகம் மிக சிறியது... மிக மிக அழகானது... என்றும் எனக்கு ஒய்வு தரும் ஒரு குட்டி சொர்கமல்லவா ...

நாம் நம் வாழ்வினில் சந்திக்கும் அனைத்தும் விபத்துகள் அல்லவே ??? ஏதோ ஒரு காரணத்திற்கு மட்டுமே அனைத்து சந்திப்புகளும் நடைபெறுகிறது... நான் உன்னை சந்தித்ததும் அப்படிதான் என நம்புகிறேன்...

எத்தனை எத்தனை முரண்பாடுகள் நம் இருவருக்குள்... அத்தனையும் தாண்டி இன்றும் இனிதே இந்த பயணம் தொடருகிறது... இனி பயமில்லை... காலமெல்லாம் தாண்டி வல்ல்கை கடலின் கரையை தொட்டு விடும் நம் உறவு படகு... ஆனால் மனதில் சின்ன நெருடல்... சரியா தவறா தெரியாது..மனதில் சட்டென்று சிறு வலி தோன்றுகிறது... எனக்கான உன் நேரங்கள் ஏற்கனவே பகிர்ந்தளிக்க பட்டுவிட்டது... இனி ... கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒன்றுதான்... ஏன், என்னுடைய வேண்டுதலும் கூட... கனவும் கூட... கனவு கை கூடி வரும் போது சிறு வலி... இனி நீயும் வாழ்க்கை சக்கரத்தில் சுழல தொடங்கி விடும்போது நான் மறைந்து போகாமல் இருக்க வேண்டுமென.... உன்னிடம் சொல்லியது தான்... உரக்க கத்தியதுதான்...

"இன்று மட்டுமல்ல... என்றும் தொடரும்... எனது ஏகாந்த தொந்திரவுகள்"
                    
                                                                        இவள்





ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்....

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்.... அழுகை, ஆறுதல், அன்பு, என அனைத்திலும்... பெறுவதில் மட்டுமல்ல ... தருவதிலும் தாராளமான சுகமிருக்கிறது... சில இடங்களில் ஏமாற்றம் கூட வலியுடன் கூடிய சுகமாகவே இருப்பதுதான் அதிசயம் .... சில பிரிவுகளும் .... நடக்க போகும் நன்மைக்காக சில பிரிவுகளை வலிய ஏற்கும் போதும் வேதனையான சுகம் தான், நினைவுகளின் வடிவினில் ... 

இந்த சுகமான தருணங்களின் வரிசையில் முக்கிய இடம்.... "எழுதுவது - பகிர்வது ".... மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர, நல்ல நட்பினை தரும் இடம்.... எழுதுகோலுக்கும் காகித தாளுக்கும் இருக்கும் பரிசுத்த பகிர்வில் மனமெல்லாம் மயிலிறகாய் மாறி விடும் மாயம் இங்கு மட்டும் தான்.... வார்த்தைகளில் வெளிப்பட தயங்குவதெல்லாம் , புது காவிரி வெள்ளமென மடைதிறந்து கொட்டும் இடம் .... நம் மனதிற்கு நாமே நீதி வழங்கும் வழக்காடு மன்றம்.....

இதெல்லாம் தெரிந்திருந்தும் ... மிக பெரிய தவறென இந்த சொர்கத்தை மறக்க வேண்டிய சில பல சூழ்நிலைகள் .... இதுவே சரியான தருணம் என உணர்கிறேன் ...தவறுகளை திருத்தி கொள்ள .... இதோ வந்து விட்டேன் என் நட்பே.... உன்னிடமான என் உறவு என்றுமே நான் வருந்த விட்டதில்லை .... தவறு செய்து விட்டோமா ? என யோசிக்க அனுமதித்ததில்லை .... அத்தனையும் சரியாக அமைந்த பொழுது ஏது வருத்தப்பட நேரம் ???? உணர்ந்து விட்டேன் .... உன்னை கை கொண்டு விட்டேன் இப்போது .... உன்னை கண்டு பலர் பயப்படவும் செய்கின்றனர்... ஆனால் எனக்கு மட்டும் ஏனோ என்றும் மனதிற்கு மிக அருகினில்..... வந்து விட்டேன்.... இன்னும் 7 நாட்கள் மட்டுமே... சிறு வயதில், வங்கி வைத்த புது துணியை தினமும் தடவி பார்த்து மனம் குதூகலிக்கும்.... உடுத்த போகும் நாட்களுக்காக கனவுகளுடன் காத்திருக்கும்... இங்கும், இன்றும் அதே நிலை... உன் நினைவுகள் மேலோங்கி நிற்கிறது... நாட்களை நகர சொல்லி அவசர படுத்த தோன்றுகிறது... என்ன விந்தை உணர்வுகள்... இருப்பினும் இதும் சுகமாகவே இருக்கிறது...

புது வருட நாள் முதல் நம் பகிர்வுகள் ஆரம்பம் ...இனி எல்லாம் ஜெயமே ! நம்பிக்கையின் மறு உருவமாக, வேண்டியதெல்லாம் தந்து கொண்டிருந்த மாயாஜாலம் நீ.... ஆதலால் உரைக்கிறேன் .... இனி எல்லாம் ஜெயமே ....

இவள் 

இனியவள் .....


11/5/13

Without you ???

Dear...

You are the meaning of my life,


You are the dreams of my thoughts,


You are the lyrics of my feelings,


You are the literature of my silence,


You are the journey of my emotions,


You are the translation of my path,


You are the definition of my identity,


You are everything for me,


I am nothing without you...!



10/8/13

எத்தனை எத்தனை அழகு ...

உனக்கான என் நேரங்கள் 
மிக அழகானவை !

பெறுவதை விட 
தருவதில் உள்ள சுகம் போல !

காணாமல் கண் மூடி 
காத்திருக்கும் நொடிகள் போல !

மண் தழுவும் 
மழை வாசம் போல !

மலராமல் மலர்ந்திருக்கும் 
மலரின் நாணம் போல !

சின்ன குழந்தையின்
செல்ல சிரிப்பை போல !

தேர்ச்சிபெற்ற சிற்பியின் 
தேர்ந்தெடுத்த சிலை போல !

அந்திவானம் சாயும் போது  
சிந்தி சிதறும் வண்ணம் போல !

எத்தனை எத்தனை அழகு ...
அத்தனை அத்தனையும் போதவில்லையடி ,

உனக்கான என் நேரத்தின் 
அழகினை எடுத்து சொல்ல !!!


10/7/13


கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான் ....


உன்னில் நானாக இருந்து 
என்னில் நீயாக நடந்து முடிந்த 

காலம் இன்று சிரிக்கின்றது 
கண்சிமிட்டி தாண்டி போகின்றது ....

தவறுகள் மட்டுமே 
தாறுமாறாக தெரிகின்றது ...







குற்றங்கள் மட்டுமே ஏனோ 
சுற்றங்களுக்கு தெரிகின்றன ...

தட்டி கொடுத்த நிமிடங்கள் 
பட்டு போய்விட்டன ...

தெரிந்தே தவறு செய்தாலும்
பிரிந்து செல்ல முடியுமா?

தினம்தினம் ஆயிரம் வேஷங்கள் .... ஆனால் 
அத்தனையிலும் மாறாதது பாசங்கள் மட்டுமல்லவா? 

தென்றலென தேடிவரும் என் 
உள்ளம் உன்வாசலில் ....

கதவுகள் திறக்கவில்லைஎனில் 
காதோரம் சொல்லி செல்வேன் 
நமக்கான நம் நட்பின் கனவுகளை .... 


நடிக்கின்ற இந்த உலகத்தில் உன் 
துடிக்கின்ற இதயம் என்றும் 

மகிழ்ச்சியில் திளைத்திருக்க - என் 
வேண்டுதல்களை விட்டு செல்வேன் ....

தோழி ....., புரியாத புதிர் நீ !



இன்பம் - துன்பம்
இரண்டற கலந்தவள் நீ !

கண்ணீர் - களிப்பு
கலவை  நீ !

சண்டை - சமாதானம்
சரிவிகிதம் நீ !

ஏற்றம் - தாழ்வு
ஏகமாய் தருபவள் நீ !

விருப்பு - விஷமம்
விகிதாசரம் நீ !

நெருக்கம் - பிரிவு
நெஞ்சுருக்கம் நீ !

அயர்ச்சி - அரவணைப்பு
அடுத்தடுத்து அளிப்பவள் நீ !

குழப்பம் - தெளிவு
என்னுள் என்றும் நீ !










ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

ஜன்னலில் கொஞ்சம்
சன்னமான நிலவொளி !

நெஞ்சுக்கு அருகினில்
கொஞ்சும் கொலுசின் ஒலி !

அடடே

சொர்க்கம் தேடி நானும்
சொல்லாமலே வந்து விட்டேனோ ?

இந்திர ஜாலம்
இதயத்தில் மெல்லிய சலனம் ... என

அவள் பாத கொலுசின்
ஆட்டம் என்னை

எங்கோ கூட்டி செல்லுதே
ஏகாந்தமாய் மயக்கி கொல்லுதே ....

நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் நிறைகிறதே ...

நிஜத்தில் நடந்தால்
நெஞ்சம் தாங்குமோ ???



10/5/13

சலசலப்பு...

மனம் கசிந்து 
கண்களில் தெறிக்கும் போது 
ஒரு  மெல்லிய சலசலப்பு ...
மனதிற்கு வெளியே ....
எட்டி பார்த்தேன் ...


உன் குறுந்தகவல் ...
இப்பொழுது 
பல புயல்களின் சலசலப்பு ...
மனதிற்கு உள்ளே ...

அடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமா ? ? ?



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் 

துளியாய் துளியாய் குறையும் 

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே 

தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும் 

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே 

இந்த காதல் வந்துவிட்டால் 

நம் தேகம் மிதந்திடுமே 

விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே 

ஒ ..ஒ ..ஒ ..



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா 

மழை கிளியே மழை கிளியே 

உன் கண்ணை கண்டேனே 

விழி வழியே விழி வழியே 

நான் என்னை கண்டேனே சென்றேனே 


ஆசை என்னும் தூண்டில் முள் தான் 

மீனை நெஞ்சை இழுக்கும் 

மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட 

மனம் துடிக்கும் 

சுற்றும் பூமி என்னை விட்டு 

தனியாய் சுற்றி பறக்கும் 

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ 

புது மயக்கம் 

இது மாய வலை அல்லவா 

புது மோக நிலை அல்லவா 

உடை மாறும் நடை மாறும் 

ஒரு பாரம் என்னை பிடிக்கும் 


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் 

முன்னே முன்னே 

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் 

பெண்ணே பெண்ணே 

அடி இது போல் மழை காலம் 

என் வாழ்வில் வருமா ??????????????????????????????????????????????????????????????????????????????????????????

10/4/13

கள்ளம் கபடமற்ற உன் மனது ... (Only For You my Dear...)

ஒரு ஒரு ஜீவனுக்கும்  உயிரோடு உறவாடும் ஒரு நேசம் இருக்கத்தான் செய்கிறது இப்பூவுலகில் ... காதலாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நட்பாகவும் இருக்கலாம். காதல் : இன்பத்தை தரும். இன்பமாக இருக்க விடாது ... நட்பு .................. ?

எனக்கு கிடைத்த நட்பு ...


உலகினில் எனக்கான பொக்கிஷம் ... என் வாழ்வினை மாற்றியமைத்த ஒரு பயணம் ... எனக்கான உன் நட்பு ... நினைத்து பார்த்தால் அத்தனையும் இன்பம்தான் ... (இன்று என்னை நினைக்க உனக்கு நேரமில்லாத போதிலும்)

எனக்கே எனக்கான உன் உலகம் என்றும் பசுமையோடுதான் இருக்கிறது. மாறுவதற்கு மறந்து போன வசந்த காலமாய் பூத்துக்கொண்டுதானிருக்கிறது ... (என் இதயத்தில் மட்டுமே)

காலம் நான்கு வருடங்கள் இதோ முடிய போகிறது, உன்னுடனான என் பிரிவுக்கு பிறந்தநாள் பிறக்கத்தான் போகிறது.... எத்தனையோ மாற்றங்கள் நம்மில் வந்து போனாலும் தவறுகளை ஒத்துக்கொள்ளவோ, திருத்திக்கொள்ளவோ ஏனோ நம்மிருவரிடமும் மாற்றம் வரவில்லை . 

நீ பிரிந்து போனதால் மறந்து போனேன் ... நீ மறந்து போனதால்தான் பிரிந்து போனேன் ... தன மேல் பிறர் வைத்திருக்கும் அன்பினை எண்ணி எண்ணி மகிழ்ந்த காலங்கள் மறைந்து, ஒருவர் மற்றவர்கள் மீது தவறுகளை தேடி பிடிக்கும் காலம் வந்து விட்டது.... 

எனக்காக வைத்துக் கொள்ளப்பட்டதாக சொன்ன அலைபேசியில் என்னை அழைத்து பேசவே மறந்து போன காலம் இந்த நிகழ்காலம் ... விடிய விடிய கதை பேசி (என்னோடு), விடிந்த பின்பு உறங்கி போன கவிதை கோலங்கள் ... உன் குரல் கேட்டு எழுந்து கடைசியாக உன் குரலிலே உன்றங்கி காலங்கள் ... இன்று புயலடித்து களைந்து போன காலங்கள் தானோ ?

உன்னிடம் நான் கண்டு பெருமிதம் கொண்ட எல்லாமே இப்பொழுது குறைத்து விட்டதாய் என் மனம் போரிடுகிறது அறிவோடு ... அறிவு சொல்கிறது, அவள் அப்படிதான், சூழ்நிலைக்கு அடிமையில்லை உன்னைப்போல என்று மறு மொழி கூறி நகைக்கிறது.... 

உன் மீது நீ கொண்ட நம்பிக்கை... ஜெகத்தினை ஜெயிக்க வைக்கும் உன் அன்பு... யாரிடமும் அசராத உன் கண்டிப்பு ... கல்வியில் நீ கொண்ட கடமை ... உனக்கான வரைமுறைகள் (நீ வகுத்து கொண்டதுதான் ! )... ஒழுக்கத்திற்கான விதிமுறைகள் ... என அத்தனை அத்தனையும் என் தோழியிடம் ... நான் கண்டு பெருமிதம் கொண்டதுண்டு ... எப்படியும் வாழலாம் என்றிருந்த என்னை மாற்றிய உன் நட்பு... இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உன் கொள்கை ... அத்தனைக்கும் நான் காலமெல்லாம் தலை வணங்கியே ஆகா வேண்டும் தோழியே ...


உனக்கான வார்த்தைகளை தேடும் பொழுது வரும் மன போராட்டங்கள் சொல்கின்றன நமக்கான இடைவெளியை ... எதையும் சொல்லும் மன நிலை (தைரியம்) என்னிடம் இல்லை. சொன்னாலும் பிடிவாதம்தான் முன்னின்று நம்மிடையே பஞ்சாயத்து செய்ய வேண்டியிருக்கும் ... என் மேல் நீ சுமத்த ஆயிரம் குற்றங்கள் என்னிடமும் உண்டு.... ஆனால் உன்னை குற்றம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை... என்னுடைய தேர்வு எப்படி தவறாகும் ? நான் உனக்கு பிடிக்காததை செய்யும் போதெல்லாம், உனக்கான என் உலகம் உன்னை விட்டு நகர்ந்து சென்றது ? அனால் எனக்கான உன் உலகம் இவ்வளவு இடைவெளியில் என்னை விட்டு சென்றதேன் ? நான் என்றுமே இப்படிதான் என உனக்கும் தெரியும். ஆனால் நீ என்றுமே இப்படியில்லையே ? இன்று ஏன் ? நன் கேட்பது தாமதமாக இருக்கலாம் . ஆனால் நான் கேட்பதில் தவறில்லையே ?

எத்தனை இடைவெளி வந்தாலும், காலங்கள் கன நூறு கடந்தாலும் மாறாமல் இருப்பதுதானே உண்மையான அன்பு ? நீரின் தன்மை மாறலாம் . உருவம் மாறலாம் ... ஆனால் அது இயற்கை தன்மை மாறிவிடுமா என்ன ? நெருப்பினில் வெந்து விடுமா என்ன ? அது போல ..... கள்ளம் கபடமற்ற உன் மனது ... ஒரு பொழுதும் மாறாது... இன்ற இந்த நிகழ்காலமும் மாறும் ... கடந்த காலத்தை போல... அந்த இறந்த காலமும்  நிகழ் காலம் ஆகும்... இந்த நிகழ் காலமும் இறந்த காலம் ஆகும்... அந்த வசந்த காலத்திற்கு காலமெல்லாம் காத்திருப்பேன் .... இன்றைய அவசர உலகம் உனக்கு என்றாவது சலிக்கும் போது , உன் கடந்து வந்த பாதையில் சற்று நிதானித்து திரும்பி பார் ... உனக்காக காத்திருப்பேன் ... நீ ஓய்வெடுக்க நான் தோள் தருவேன் ... உன் மனதின் அலைகள் ஓயும் பொழுது அடியினில் நானிருப்பேன் ... 

(No-one in this world having busy schedule... The only thing is giving priority... That's all... 
I may last in this 'Q'... 
But this is not an END... 
Because, everything should have a happy end.. If it is not... Its not an END...
I believe this ...) 






I also believe that, you can understand, what I am stating here. And you ask a moment to your heart. it knows everything...  Just sit peacefully, close your eyes. And you can ask yourself...

1. What I am doing at present ?
2. Am I travel in wright way ?
3. Whats my duty ?
4. Is this above said wording are correct?
5. How much I am close to God?
6. Am I OK?
7. 'I am happy' Is this sentence is true?


Answer the above said questions. Why I am asking you these seven question only? Because of your name, which I used to call you is seven letters know.

[Even I don't know, you will read or not. But for my satisfaction, I shared my feelings here. 
Really I feel ..... 
Previously, You used to say that, 'I can feel your feelings'. Now how much this sharing will work? I don't know. But my heart started to offering prayers for your GOOD. Close/ Distance... That is not a matter. You should be happy & GOOD. Thats enough. Hence, I am your friend, well-wisher, I am seeking your 'Good' & I am always awaiting for your 'RETURN']

Here

GUNA


9/28/13

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்....

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.... 
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேணும்.. 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேணும்........ (உண்மைதானே?)


அனைவருக்கும் ஆசை ...



அனைவருக்கும் ஆசை ... அனைவரும் நமக்கு பிடித்தபடி நடக்க வேண்டும் என்று.... சரி அவர்களாவது அவரவர் விருப்பபடி நடந்து கொள்கின்றனரா என்றால் அதும் இல்லை ... இப்படி அடுத்தவரை மகிழ்விக்க முயன்று முயன்று கடைசியில் தனக்கு தேவையான சந்தோஷத்தை தர மறந்து போய் விடுகின்றனர் .... என்ன படிக்கும் போதே குழம்புகின்றதா ?

தினம் தினம் எத்தனை முகமூடிகள் ! சிரித்து சிரித்து எத்தனை வேடங்கள் ! கட்சிகளை மாற்றியமைக்கத்தான் முடிவதில்லை ! அட, நிகழ்வுகளை ஏற்று கொள்ளவும் முடிவதில்லையே ! யாரிடமும் உண்மையில்லை ... முகமூடியறிந்தும் முற்றுபுள்ளி வைக்க இயலாத உறவுகள் பல! 

இத்தனையும் அறிந்திருந்தும், உண்மைகள் புரிந்திருந்தும், பாழும் மனது ஆசை படுகிறது இப்படிங்கோ ::: "வாழ்வது ஒரு நாளாகினும் உண்மையாக, பிடிச்சபடி, முகமூடியில்லாமல், முழுவதுமாக வாழ்ந்து விட வேணும்" என !!! எப்புடி? எப்புடி?




மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?



தினம் தினம் விடிந்து விடுகிறது .... தினம் தினம் இதோ முடிந்தும் விடுகிறது ... இஷ்டமும் சரி, கஷ்டமும் சரி , இரவு பகல் போல மாறி கொண்டுதான் இருகின்றது .... நினைவலைகள் கூட சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் அமைதியாகவும் நெஞ்சினில் அலை மோதுகின்றது ....

இப்படி எல்லாமே மாறி கொண்டிருக்கையில் உங்களை நான் தொலைத்து விட்டு ஏங்கிய 'ஏக்கங்கள்' மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதன் மர்மங்கள் தெரியவில்லை .... ஏனோ நீங்கள் திடீரென வந்துவிட மாட்டீர்களா ? என்ற எண்ணம் தலைதூக்குவதை தடுக்கவே முடியவில்லை என்னால் .... நீங்கள் சொல்லி கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும் இங்கு காணாமலே போய் விடுகின்றன. தேடி பிடிக்கவும் விருப்பமில்லை எனக்கு... எப்போதெல்லாம் தனிமை என்னை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் உங்கள் நினைவுகளே எனக்கு துணை நிற்கின்றன .... எங்கெல்லாம் நான் இருளை உணர்கிறேனோ அங்கெல்லாம் உங்கள் நினைவுகள் தீபமாய் ... எங்கெல்லாம் நான் தடுமாருகிறேனோ அங்கெல்லாம் உங்கள் நினைவுகள் கைதாங்கியாய் ... யாருமற்ற வழிப்பாதையாய், திக்கற்று நான் நிற்கையிலே உங்கள் நினைவுகளை தவிர வேறு என்ன எனக்கு துணையாய் வர முடியும் ....

உலகினை நான் பார்க்க ஜன்னல் திறந்து காமித்துவிட்டு ... உறவுகளை சமாளிக்க நித்தம் சொல்லி கொடுத்துவிட்டு .... உழைப்பிற்கும் உள்ளத்து அன்பிற்கும் அடிபணிய சொல்லித்தந்துவிட்டு... சொல்லாமல் சென்றதென்ன ? மரியாதையின் மறுபெயராய் வாழ்ந்தவர் இப்படி செய்யலாகுமா ?

நித்தம் நித்தம் நான் திணறுகிறேன் ... நிந்தனையால் சிந்தனை மழுங்குகின்றது .... யாருக்காகவோ வாழ்ந்து யார் யாரையோ திருப்திபடுத்த முனைந்து , வாழ்க்கையின் பெரும் பகுதி முடிவடையும் இவ்வுலகில்... நதியில் சிக்கிய சிறு படகாய் தடுமாறுகிறேன் ...

எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கின்றதே ! நீங்கள் திரும்ப வந்துவிடும் அதிசயமும் நடந்தால் தான் என்னவாம் ? நடக்காது என்பது அறிவுக்கு தெரியும் . ஆனால் மனம் நிதம் எதிர்பார்க்கத்தானே செய்கிறது ... பித்து பிடித்த இந்த மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?




9/17/13

நம் கல்லூரி நினைவுகள் ....



மழை பெய்த காலை பொழுது 
காய்ச்சலின் பொழுது அம்மா தரும் காபி 
நிலவுடன் கழிக்கும் மொட்டை மாடி இரவுகள் 
பார்த்தவுடன் சிரிக்கும் பக்கத்து வீட்டு குழந்தை 
இரம்மிய இரவில் காற்றோடு வரும் கீதம் 
கொளுத்தும் கோடையில் முகத்தில் அறையும் தென்றல் 
சோர்ந்த பொழுது எதிர்வரும் தோழனின் புன்னகை 
பச்சை வயல்களுக்கிடையே வரில் ஜன்னலோர  பயணம் 
இவற்றை போல சுகமானது 
நம் கல்லூரி நினைவுகள் ....

தீற்றியவள் 

தீபா ...
           



9/16/13

சென்டிமென்ட்டா? ஆசிரியர்கள் தினத்துக்காக????





சென்டிமென்ட்டா.. ஆசிரியர்கள் தினத்துக்காக.. ஆசிரியர்கள் வாழ்கன்னு எல்லாம் உணர்ச்சிப் பூர்வமா என்னால வாழ்த்து சொல்ல முடியலை பாஸ். ......

இப்படி ஒரு பதிவ நம்ப நண்பர் ஒருத்தர் எழுதி இருந்தார். அவரோட உணர்வுகள் பற்றி தவறு சொல்ல முடியாது. உண்மையா சொல்லணும் என்றால், அப்படி எல்லாரும் அடி வாங்கி இருப்பாங்க ... முதலாம் வகுப்பெடுத்த பங்கஜம் டீச்சர் ..... 5 நிமிடம் லேட் ஆனா கூட ஒரு கிள்ளு கிள்ளுவாங்க பாருங்க .... பயத்துலயே பாதி உசுரு போய்டுங்க ... இரண்டாம் வகுப்பெடுத்த இரத்தினம் டீச்சர் .... அவங்க கைல வெச்சிருந்த பிரம்பு ... தூக்கத்துலயும் மறக்காதுங்க .... மூன்றாம் வகுப்பெடுத்த சின்ன அய்யா ... அதிர்ந்து கூட பேச மாட்டாருங்க .... ஆனா தப்பு பண்ணா அவ்ளோதான் ... வெளில நிக்க வெச்சுடுவாருங்க ... நான்காம் வகுப்பெடுத்த தெய்வானை டீச்சர், ஐந்தாம் வகுப்பெடுத்த சாரதா டீச்சர் இப்படி ஒரு ஒருத்தருக்கும் ஒரு அடையாளங்கள் .... (இதுக்கு மேலயும் உண்டு... ஹை-ஸ்கூல் , கல்லூரி இப்படி பட்டியல் போயிட்டே இருக்கும் ,....)

இந்த அடையாளங்களை அவங்களுக்கென நாமதாங்க உருவாக்கினோம் ??? கொஞ்சமா குறும்பு பண்ணினா அவங்களும் சொல்லறதோட நிருத்தியிருப்பங்க ///  .... என்னை கேட்டால் , அவங்கெல்லாம் பொறுமையின் சிகரம் . நமக்காக கத்தி, டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துகிட்டிருகாங்க ... சில உண்மைகள் கசக்கும் .... 

என்னதான் இப்படி அடிச்சு, மிரட்டி, நமக்கு டீச்சர் அஹ இருந்திருந்தாலும், இன்னைக்கு நாம பொய் அவங்களுக்கு மரியாதையாக, பாசமாக 2 வார்த்தை பேசி பாருங்க .... அவங்க மனசுல இருந்து பொங்கும் சந்தோசம் கண்களில் தெரியும் .... மாணவன், மாணவி என்று பெருமையா சொல்லுவாங்க பாருங்க , அங்க தெரியும் அவங்க பாசம் ... நாம பண்ண தவறுக்களை எல்லாம் மறந்து நம்மகிட்ட பேசும் போது நமக்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் ....

உண்மையாகவே இன்ற நாள் இப்படி பல உணர்வுகளை தட்டி எழுப்பற நாள்தாங்க என்னை பொறுத்தவரை ....

ஒரு ஒரு ஆசிரியரும், என்னை பொறுத்தவரை நம் வாழ்வெனும் சிற்பத்தை செதுக்க கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட சிற்பிகள் ...

அவர்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரியலங்க... ஆனா, ஒரு ஒரு தருணங்களிலும் நினைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் ... வாழ்கையின் ரொம்ப செண்டிமெண்ட் பக்கங்களில் முக்கியமான பக்கம் இந்த 'ஆசிரியர்கள்'.

இது என்னோட உணர்வுகள் ... இப்படி ஒரு ஒருத்தருக்கும் இது மாறுபடலாம் ...

பல வித எண்ணங்களும் வண்ணங்களும் கலந்ததுதானே நம் வாழ்க்கை? ....

இவள்

இசையானவள் ... 05/09/2013


புரிதலின் அர்த்தமென்னவோ?

கனவுகளால் கட்டப்பட்ட
காட்டு குருவியின் கூடு ...
காத்தடித்தால் களைந்து போகும் ...
காட்டு குருவிக்கும் இது தெரியும் ...

தெரிந்திருந்தும் எதிர்காலம்
புரிந்திருந்தும் இங்கு
இதன் நோக்கமென்ன?
புரிதலின் அர்த்தமென்னவோ?

அன்றைய வாழ்வை
அன்றே வாழ்ந்து விடுகிறதோ ?


                                                                                           இவள் 
                                                                                          
                                                                                                  இசையானவள் ...

6/17/13

காலத்தால் அழியாது ...


புது புத்தக வாசம் 
புத்தாடைகளின் சலசலப்பு 

தெரியாத முகங்கள் 
அறியாத அச்சங்கள் 

பெருமிதமாய் பெயர் சொல்லி 
சிறு பிள்ளையென நான் செல்ல 

அம்மாவின் கையசைப்பில் 
அப்பாவின் புன்னகையில் 

பிரிய மனமில்லாமல் 
மெல்ல நுழைந்தேன் .....

நினைக்கையில் இனிக்கிறது 
நெஞ்சமெல்லாம் கனக்கிறது ...

பள்ளிதனை நான் கடக்கையிலே 
நெஞ்சமது நகர மறுக்கிறது ...

பட்டங்கள் பெற்றாலும் 
சட்டங்கள் தெரிந்தாலும் 

கபடமற்ற குழந்தைப்பருவம் 
கற்றுத்தந்த பாடமெல்லாம் 
                      காலத்தால் அழியாது ...


2/26/13

உயிரோடு ஒரு பாடல் ...

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு தொன்னையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


2/12/13

தோழிக்கான ஒரு பிராத்தனை

அட என்னங்க....

முன்னுரை எழுதியாச்சு . முடிவுரை வேண்டாமா ? (நீங்க திட்றது கேட்குதுங்க, ஊர் வந்ததும் ஊடகத்தை தேடி ஓடி வந்தேன் ... )

கொஞ்சம் பிஸி ... அதான் .

சரி சரி விஷயத்துக்கு வருவோம்.

நான்  எழுதின முன் பதிவினில் ஒரு தோழி யின் கண்ணீரை பகிந்துகிட்டேன் .... சரியானு தெரியல . ஆனா ஏன் மனசுல இருந்த பாரத்தை இறக்கி வைக்க இடம் தெரியலைங்க .....

அவளுக்கு நான் தந்த யோசனை இந்த பதிவினில் உங்களோட பகிந்துக்க விரும்பறேங்க ... வழக்கம் போல உங்க கருத்துரைகளை நீங்களும் கூறலாம். நன் சொன்னது சரியாய் தவறா என தெரியாது.

*****************************


போனது போகட்டும் ...
போகிஎன முடியட்டும் ...

நல்ல உள்ளங்கள்
நாளும் உனக்காக ....

ஒரு கதவு மூடினால்
மறு கதவு திறந்திருக்கும்

கண் திறந்து நீயும்
காட்சி நோக்க வேணும் ...

சுயநல உலகம்தான் ...
சூட்சிகள் சூழலும்தான் ...

பெண்ணே நீ பதறாதே ...
கண்ணீர்தனை சிந்தாதே ... 

கடமைகள் காத்திருக்க
மடமையென இருப்பதேன் ?

நீ கொண்ட பாசம்
தாய் கொண்ட நேசம் ...

உன் நட்பு - அவளுக்கு  ஏனோ
கொடுத்து வைக்கவில்லை...

கண்ணீர் சிந்தியது போதும் ...
காட்சி பிழைகளும் போதும் ...

பன்னீர் பூக்களும் உனக்காக...
பாச மழையும் உனக்காக ...

நித்தம் நித்தம் நிம்மதி
சித்தமெல்லாம் சிவ சந்நிதி ...

நட்பும் வாழ்க்கைதான்
நட்பு  மட்டும் வாழ்க்கையல்ல ....

*******************************

இப்படி ஏதோதோ சொல்லி (உளறி) அவளை தேற்றினேன் (நினைத்தேன்). நீங்களே சொல்லுங்க... ஏமாற்றி நட்பு மட்டும் தான் வாழ்க்கையா ? எந்த மனிதனின் மனதினில் சோகங்கலில்லை ? ஏமாற்றங்கள் இல்லை ? கண்ணீர் இல்லை ? எல்லாமே இருக்குங்க ... ஏனோ வெளில சிரிசுகிட்டு , Hi , how  are you கேட்கற நாடக நடிகர்கள் கிட்ட yeah , I  am  fine  என சொல்லிட்டு போய்கிட்டு தன இருகாங்க பய புள்ளைங்க ....

நானும் உங்கள கேட்கறேன் "எப்படி இருக்கீங்க? சுகம் தானே ?" . மனசுல கை வெச்சு சொல்லணும் நாடக பிரதியா  நான் கேட்கல. அன்பின் சாட்சியாக கேட்கிறேன் ? சொல்லுங்க பாக்கலாம்.

சரிங்க . கடைசியா ஒரு சின்ன வேண்டுகோல் . உங்களுக்கு அறிமுகம் இல்லாமல், உங்களில் ஒரு நாடக பிரதிநிதியாய், உங்களில் ஒரு மானுட பிறவியாய்  வலம் வரும் என்  தோழிக்காக  ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள் .... அவள் மனம் நலம் பெற ....
***********




1/30/13

ஆறுதலுக்காக அல்ல...


 

வாடி என் தங்கமே ...
வந்து பதில் உரைபாயடி...

ஒரு நாளா இரு நாளா
ஓரிரு மண்டலமென 29 நாட்களாடி ...

இயேசு பிதாவிற்கு 40 நாட்கள்
இதயம் உருகி தவமிருக்கிறாய் ... இந்த

ஏமாந்த அபலைக்கு 29 நாட்கள்
ஏகாந்தமாய் விரதமிருக்க போகிறாயா?

எத்தனை இழந்தாலும் - நானோ
உன்னை இழந்துவிடாமலிருக்க போரிட்டேன் ...

அன்றென்னை  விட்டுகொடுத்ததுமின்றி  - நீயோ
இன்றென்னை இழந்துவிட போரிடுகிறாய் ...

இதற்காகவா போராடினேன் ?
எதற்காக சீராடினேன் ?

என்றென்றும் பசுமையான நட்பெங்கே?
என்றென்றும் வீசிவரும் தேன்றலெங்கே ?

பால் சிந்தும் பவுர்ணமியெங்கே ?
தேன்  சிந்தும் புன்னகையெங்கே ?

ஆறுதலுக்காக அல்ல - இவை (இந்த)
ஆறாத காயங்கள் ...

ஆறுதல் தேடி நான்
அலைந்திருந்தால் இன்று

அரவணைப்பில் மட்டுமின்றி
ஆனந்தமாகவும் நானிருப்பேன் ....

அத்தனை இதயங்களும் உங்களை போல
அரவணைத்து ஏமாற்றுவதில்லை அகிலத்தில் ...


பின்குறிப்பு :
                      இத்தனைக்கு பிறகும் இந்த ஆறுதலை எப்படி ஒரு ஏமாற்றிய மனித ஜென்மத்திடம் தேட  முடியும் ? உயர்வான "ஆறுதல்கள்" உயர்ந்த உள்ளங்களிடம் மட்டுமே கிடைக்கும் என உணர்ந்தேன் ... வாழ்வாதாரத்திற்காக வஞ்சம் தீர்க்கும் மனிதர்களிடம் என்ன எதிர் பார்க்க ? பாசத்தினை வேஷம் போடும் மனித மிருகங்களிடம் காட்டி என்ன பயன் ? உயிர் போனாலும் உள்ளுளவு செய்ய கூடாதென நானிருக்க, தமிழர் நெறி மறந்து என்னை நடுவில் வைத்து பகடை ஆடியதென்ன ? மனைவியை வைத்து சூதாடியதால் "மகாபாரதம்". "நட்பினை" வைத்து சூதாடிய இவர்களிடமிருந்து என்ன காப்பாற்ற யார் வருவார்கள்?  எனக்கென்ற ஒரு தோழி என்றேன் ! அதனால்தானோ சுயநல சூதாட்டத்தில் சூத்திரதாரியாகி என்னை பகடையென  சுழற்றி போட்டாள் ! 

                        அத்தனையும் மன்னிக்கிறேன் ... அன்பே வந்து விடு ஏன் அடுத்து வரும் பக்கங்களில் ... யாரோ என்னை ஏமாற்றவில்லையே , என் உயிரினில் கலந்த ஒரு நேசம் தானே தடம் மாறி போனது ... இருப்பினும் என்ன ஒரு கை தேர்ந்த நடிகை தெரியுமா? இந்த 29 நாட்கள் ... எனக்கு காட்டியது / எனது கேள்வியெல்லாம்... ஏன் இந்த நாடகம் ? எனக்கும் தெரியும் ... என்  மனமே நீதானடி என்று கூறினாயல்லவா ? நீ உணவருந்த , ஏன் வயிரல்லவா நிறையும் ... அப்படியிருக்க உன் மனம் என்னிடம் தானே உண்டு. தவறு தவறு. உன் மனமே நானல்லவா ? நேற்றுதான் என்னிடம் கேட்டேன். உன் மனம் கூறியது....

                        என்னடா , கடவுள் காட்சிகளை மாற்றி போடுகிறார், என்  வாழ்வில் நடந்ததெல்லாம் , என்  கண் முன்னே நடக்கிறதே என வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் ...... இப்போதல்லவா புரிகிறது....  எனக்கு தெரியாமல் எனக்கு எழுதப்பட்ட முடிவுரையை நானும் ஏன் கண்முன்னே நடக்கும் காட்சிகளுக்கு எழுத வேண்டுமென தேவன் புரிய வைத்தான்...

                    எழுதுகிறேன் ... ஏகாந்த புன்னகையோடு .... இன்றே.... 31.01.2013....



1/28/13

என்னில் எல்லாமுமாக நீ ...




என்னில் எல்லாமுமாக நீ ...
உன்னில் எதுவுமற்று நான் ...

ஏனோ என்னில்  வந்தாய் ...
எதோ  வலியினை தந்தாய் ...

நடுவினில் நானும் 
மடுவினில் மடிந்தேன் ...

பட்டு கரம் தராமல் 
விட்டு நீயும் சென்றதென்ன ?

உன்னை பற்றி எழுதினாலோ 
உதட்டோரம் புன்னகை....

உள்ளம் அழுதாலும் 
உதடுகள் சிரிக்கணுமாம் ? ?





1/27/13

ஒருநாள் ...


இத்தனை நாள் என்
அத்தனை எண்ணங்களுக்கும் ....

இடம் தந்த வள்ளலாக ...
மடம்  தந்த செம்மலாக .....

வெகு விரைவில் நானும்
நெடு தூரம் போக போகிறேன் ....

சொல்லிவிட்டுதான்  போவேன் - உன் நினைவுகளை
அள்ளிகொண்டுதான்  போகபோகிறேன் ....





1/24/13

நித்தம் நித்தம் ஏகாந்தம் ...



என்னவென்று நான் சொல்ல?

மெல்ல மெல்ல என்னை வெல்ல 
செல்ல செல்ல சண்டை போட 

எனக்கென்ற ஒரு இதயம் 
என்  முன்னே இன்று உதயம் ...

கவிகளை அள்ளி தந்து 
செவிகளை மெல்ல நிறைத்து 

நித்தம் நித்தம் ஏகாந்தம் ...
நிமிடமெல்லாம் நித்யானந்தம் ....

1/15/13

ஒரு தமிழச்சியின் கனவு ...


கரும்பினை கட்டிக்கொண்டு  தூங்கிய         
காலங்கள்  கனவோடு   மட்டுமே ....
பொங்கிடும்  பொங்கலோடு  மனமும் 
பொங்கிடும்  அதிசய தருணங்கள் ....

நகரத்து  பொங்கலும் 
நாகரீகமென  பொங்குகிறது 
நடுவீடதில் டிவி பெட்டியினில் ....

களமெல்லாம்  கூட்டி 
கண்ணை  கவரும் வண்ணங்களில் 
கோலங்களால் நிரப்பிடும் 
காட்சிகள்  இன்று  கணிப்பொறிகளில் ....

கரும்பும் இல்லை 
கனி  பொங்கலும் இல்லை
கரைந்து விட்டது 
கல்லூரி  விடுமுறையும் ...

இனிவரும்  பொங்கலாவது 
இனிக்கட்டும் எனும் ஆவலில் 
இவள் 
தமிழ் ... 


1/9/13

........ (.......)

உனது  விழிகளில்
எனது கனவுகள் ...

கண்களை பறித்து கொண்டு
காற்றோடு மறைந்ததென்ன ?

உனது பேச்சினில்
எனது எண்ணங்கள் ...

பேச்சினை நிறுத்தி
மூச்சு திணறலும் தினம் ஏனோ?


1/3/13

இதயத்தின் மெல்லிய ஜதி ...




உந்தன்

ஒற்றை பார்வை 
பட்டு தீண்டல் 
மொட்டு புன்னகை 
சிந்தும் இதழ்மொழி 
சின்ன சண்டை 
செல்ல கொஞ்சல் 
சொல்லிய காதல் ...

எந்தன்


மழை மேக மயக்கம் 
மென்மையான ரோஜா 
மலரபோகும் தாமரை 
சிதறும் மல்லிகை 
சாயுங்கால சந்தன முல்லை 
நதியின் வேகம் 
இதயத்தின் மெல்லிய ஜதி ...

தொடும் வானமாய் ....

தூரத்தில் நிலவொன்று
துடிக்கின்ற நெஞ்சமொன்று ...

தொடும் வானமாய்
தொட்டுவிடும் தூரத்தில்

சற்று கண் பார்த்தாலென்ன ?
வெற்று  சிரிப்பு  நீயும்
பெற்று தந்தாலென்ன ?

ஒரு கரைதனில் நானும்
மறு கரைதனில் நீயும்

தயக்கம் கொண்டு நிற்பதென்ன ?
மயக்கம் கொண்டு மருகுவதென்ன ?


1/2/13

நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....



உறவுகள்  உதறிவிட 
பாசங்கள் பறந்துவிட ...

நடக்கட்டும் நல்லபடி 
நாடகங்கள் நாள்தோறும் ...

எதையோ எதிர்பார்த்து 
எங்கோ ஏமாந்து ....

நடுத்தெருவில் நிற்கிறேன் 
நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....


1/1/13

மரணத்தின் முகவரி தேடி ...



சட்டென்று உன்னை பார்க்க 

சாய்ந்தே கொஞ்சம் போனேனே !

விதி வலியதா ?

சதி வலியதா ?

மதி வலியதா? தெரியாது ...

ஆனால் 

வலி வலியது ...

நெஞ்சமெங்கும் பாரம்,,,,
கண்களிலும்  ஈரம் 
காய்ந்து போய்விட ,

பைத்தியம் பிடிக்குமோ ?
பாதியில் சாவேனோ ?

வழியும் தெரியவில்லை ...
வலி தீர ......


சத்தியத்திற்கு கட்டுப்பட்டு
சவமாய் வாழ்கிறேன் ....

பெயர் தெரியாது வீதிகளில் 
என்  பயணம் 
உன் நினைவுகளோடு 
மரணத்தின் முகவரி  தேடி ...