, இனியவளின் இதய பகிர்வுகள் !: தோழி ....., புரியாத புதிர் நீ !
Views

10/7/13

தோழி ....., புரியாத புதிர் நீ !



இன்பம் - துன்பம்
இரண்டற கலந்தவள் நீ !

கண்ணீர் - களிப்பு
கலவை  நீ !

சண்டை - சமாதானம்
சரிவிகிதம் நீ !

ஏற்றம் - தாழ்வு
ஏகமாய் தருபவள் நீ !

விருப்பு - விஷமம்
விகிதாசரம் நீ !

நெருக்கம் - பிரிவு
நெஞ்சுருக்கம் நீ !

அயர்ச்சி - அரவணைப்பு
அடுத்தடுத்து அளிப்பவள் நீ !

குழப்பம் - தெளிவு
என்னுள் என்றும் நீ !










No comments:

Post a Comment