, இனியவளின் இதய பகிர்வுகள் !: July 2012

7/28/12

தீபத்திற்கு ....


தீபமாய் நீ ...  என்றும்  
தீர்கதரிசியாய் நான்...

வசந்தமாய் நீ ... வரவேற்க 
வாயிற்படியில் நான் ...

பரிசுபொருளாய் நீ... கிடைத்ததால் 
பாக்யசாலியாய் நான்....

ஏனோடி நீயும் வந்தாய்.... என்வாழ்வினில் 
ஏகாந்த வாசனையென .... 


இவள் 

இசையானவள் 


 டைரிமில்க்

5 ருபாய் நோட் 


(குட்டி) கந்தர் சஷ்டி கவசம் 

(குட்டி) பிள்ளையார் 

உண்டியல் 

காபி கப் 

போர் பார்ன் 


To be continued . . .

7/20/12


இலையுதிர் காலம் இன்று 
இமைக்கும் பொழுதினில் மாறாதோ?

ஆசைதான் பெண்ணே 
அத்தனையும் மாற்றிட !

ஈசனாலும் முடியாதடி 
இயற்றிய விதிதனை மாற்றிட . . .

வசந்த காலங்கள் வாராதோ ?
வஞ்சனைஇல்லா  புன்னகை மலராதோ ?

ஆசையிலும் கொஞ்சம் உனக்கு 
அளவில்லா  பேராசைதான் பெண்ணே !

இன்பத்தை இன்முகத்துடன் 
இறுமாப்புடன் வரவேற்கும் போது 

துன்பத்தை நீயும் 
வெறுப்புடன் நோக்குவது  ஏனோ ?



இவள் 

இசையானவள் 

உலகம் - உன் கண்ணில் 
உள்ளம் போல தெரியுமா? - பின்பு 

பூ மீது தென்றல் வாராமல் 
புயலும் வந்து சென்றது ஏனோ?

புரிந்து கொண்ட நெஞ்சம் 
பிரிந்து சென்றது ஏனோ ?

கண்ணீரில் கசங்கிய காட்சிகள் 
கண்டுகொள்ள இல்லையே சாட்சிகள் !

வருவதை ஏற்றுக்கொள் என் மனமே !
வருந்துவதும் ஏனோ என்  மனமே ?

இவள் 

இதயமானவள் !