, இனியவளின் இதய பகிர்வுகள் !: January 2024

1/28/24

பிடிமானம்....

 தளரும் போது

தயங்காமல் எனை

தாங்கி பிடிக்கும்.....


உன் புன்னகை....

என் பிடிமானம்...


வரமாய் வந்த

வசந்தகாலம் நீ...



உன் மீதான என் பிம்பங்கள்...

 உன் மீதான என்

        பிம்பங்கள் உடைந்து

               சில்லுசில்லாய்

                     சிதறிப்போனாலும்.....


உன் அன்பில்

      உருகி போய் - மீண்டும்

              உருவாக்கி கொள்ள....


எங்கோ உனை

    எதிர்பார்த்து ஏனோ

              எட்டிப்பார்த்திருக்கும்   

                     என்னென்ன மாயமென்ன???

       

உண்மைகள்...

 உண்மைகள்

உரக்க சொன்னாலும்

ஊமையாகி விடுகின்றன...

ஊர்குருவியும் பருந்தாகிறது...

1/22/24

யாரோ நீ...

 நீ யாராய் இருந்தால் எனக்கு என்ன?


கானல் நீராய் போ...

கரையும் பனியாய் போ...

காற்றில் சருகாய் போ...


ஆனால்


காதல் செய்துவிட்டு போ...

காலமெல்லாம் நானும் வாழ்த்துக்கொள்ள...


நீ யாராய் இருந்தால் என்ன?


போதும் என்ற மனமே பொன் செய்யும் மனமாம்....


23.01.2024

5.51am