சில உறவுகள்... என்றும் ஆச்சர்யம் தருவது... அன்றும் இன்றும் என்றும்... மறுக்கவும் மறக்கவும் முடியாத உறவுகள்.... "சில" என்று அனைவருக்கும் அமைத்து விட கூடியது இல்லை. என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு உறவு இந்த வகையில் கண்டிப்பாக ஒரு ஒருவருக்கும் இருக்கும்... இருக்க வேண்டும். வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு கருவி வேண்டாமா ???
அப்படிதான் .. அது அப்படிதான்... வாழ்கையில், ஒரே ஒரு வார்த்தை / ஒரே ஒரு நொடி / ஒரே ஒரு நிகழ்வு / ஒரே ஒரு உறவு ... ஏதோ ஒரு "ஒரே ஒரு " போதும். நம் வாழ்க்கையினை மாற்றி விட... அப்படியே புரட்டி போட...
எனக்கும் வந்தது... / கிடைத்தது... /... என்றும் வரமாகவே கருதுகிறேன்... ஒரே ஒரு தருணம்... ஒரே ஒரு நாள்... கடைசியாக ஒரே ஒரு உறவு... கருத்துகளை மாற்றியமைத்தது ... தோழியென வந்து... (சந்தேகம் தான் இந்த நிமிடம் வரை ) தோற்ற பிழைகளை சரி செய்தது...
ஏதோ ஒரு வித்யாசம்... புரியலையே...
எனக்கான, எனக்கே எனக்கான நட்பு... என
உரிமை கொண்டாட விட மாட்டாள்.
பட்டென்று தட்டி விடும் குழந்தை குணம்...
சட்டென்று அணைத்து கொள்ளும் தாய்மை உள்ளம்...
எந்த திசையிலிருந்து பார்த்தாலும்
வித்தியாசமான வரம் அவள்...
என்னை புரிந்து கொண்டவள். ...
நான் புரிந்து கொண்டவள் ,,,
என கூட சொல்ல முடியாது...
புரிந்தும் புரியாத,
புரியாமல் புரிந்த என் உலகமவள் ...
பனியும் கனலும் கலந்த
பகலிரவு அவள் என் உலகில்...
நினைவுகளில் அவளை
நிரப்புவதே சுகம் எனக்கு...
சுவாசமின்றி தவிக்கும் போது
சுகந்தமான சுவாசம் கிடைப்பது போல
சுகமான சுகம் அவள் ...
அவளுக்கு நான் யாரோ? எப்படியோ ?
அதெல்லாம் எனக்கு எதற்கு???
என்னில் எல்லாமுமாக
என்றும் அவள் ... அவள் மட்டுமே ...

No comments:
Post a Comment