, இனியவளின் இதய பகிர்வுகள் !: March 2012

3/30/12

சிறு பெண்ணுக்கு சமர்ப்பணம்!

பெண்ணின் மனமே . . . மண்ணின் ஆழமே !

சிறு சந்தர்ப்பத்தில் சரிந்து போகின்றாய் . . .
                             மழையில் சரியும் மண் போல . . .

சிறு பேச்சில் மகிழ்ந்து போகிறாய் . . .
                             சாரல் தரும் மண் வாசம் போல . . .


சிற்றின்பங்கள் சிரம் ஏற்காதே . . .
சிதறி நீயும் கதறாதே !

சிறு நொடி நீயும் பொறுத்திடு!
சிந்தனை செய்து அடி வைத்திடு !

சிறந்த பிறப்பாய் மாறிடு !
சினம் நீயும் தவிர்த்திடு
 
சிரத்தையாய் கண்ணீர் சிந்தாதே . . .
சிந்தனை செய்து நடை போடு . . .

சிகரம் தொடலாம் நீயும் !
சிலபல வெற்றிகள் பெறலாம் நாளும் !

சிறு சிறு தவறுகள் தான் - நீ
சிக்கிக்கொண்டு தவிக்க தடமாகிறது . . .

சிறு பெண்ணின் மனமே . . .
சிரம் ஆட்டி ஏற்பாயா இக்கருத்தை ?

சிந்தித்திடு . . .
சிறந்திடு . . .


இவள்

சிந்தித்தவள்

3/29/12

நிலவின் நினைவுகளோடு . . .

 



நட்பென்னும் நாட்குறிப்பில் - என்னில்
நாளும் இடம் பெறுகிறாய் . . .
சட்டென்று நீயும் வந்தாய் .  . . ஏனோ
பட்டென்று நெஞ்சில் பதிந்தாய் !

உன் எளிமையின் ஏகாந்தம் - என்னில்
பண் பாடும் தென்றலாய்
மண் வாசம் தரும் மழை சாரலாய் . . . ஏனோ
என்னில் பூவாசமாய் வீசுகிறாய் !

தோழியாய் உன்னிடம் தோற்று போனேன் . . . என்னில்
நாளிகைதோறும்  நம்பிக்கை தந்தாய் . . .
வாழ்நாள் வசந்தமாய் வந்தவளே . . . ஏனோ
தொலைவில்  தொடுவானமாய் தோன்றுகிறாய் !

நாளும் உனக்கு நன்மைகள் விளைந்திட - நானும்
நடராஜனை நம்பிக்கையுடன் தொழுகிறேன் . . .
வெற்றியின் மாலைகள் உன் தோள் சேர்ந்திட
வேதம் தந்தவனை தாள் பணிகிறேன் !

உற்சாகம் உடன் கொண்டு நீயும்
உலகினை வலம் வந்திட
உள்ளம் உருகி வேண்டுகிறேன் ,
உலகை அளந்தவனிடம் கை கூப்புகிறேன் !

இவள்

இனியவள் . . .