, இனியவளின் இதய பகிர்வுகள் !: June 2011

6/18/11

நகரத்து உறவுகள்...




கண்டும்
காணாத
முகங்கள் . . .
விட்டும்
விலகாத
உறவுகள் . . .
நகரத்தில்
வாழ்க்கை
நரகமாய் .....
பாசத்தை
பகிர்ந்தளிக்காத
பச்சோந்திகள் ....
அனைத்தும்
அறிந்தும்
அநியாயமாய் ...
எதிர்பார்த்து -
ஏமாற்றங்களை
ஏற்க முடியாமல்,
மனிதனின்
மனமோ
மாண்டு போகும்....


******

எதுவுமே நிரந்தரம் அற்ற உலகில் எதிர்பார்ப்புகள் மட்டும் ஏனோ நிரந்திரமாய். . .


-


6/16/11

என் தோழிக்கு சமர்ப்பணம் ...



உன் அகன்ற விழி நீரின் வழி என் கை பிடித்து நீ

பகன்ற மொழிபெயர்துணர முனைகின்றேன்...

என்னை பிரியும் செய்தி சொன்னாயா?


என்னிடமிருந்து விடுபட நினைத்த பொழுது

எனக்குள் நானே வேட்கும் பொழுது

உனக்கும் என் அன்பு கனத்ததா?


கண்ணீர் கழுவி களைந்து விட்டாய்.

வெட்டிஎன் நகத்தை பெட்டிக்குள் பதுக்கிய உன் நிழலை

சட்டத்தில் பிடித்து வைத்தேன் ஜாதி மல்லி பூ சொரிய...


நாம் அப்போது இணைந்தமர்ந்த காலங்கள்

இப்போது என் இதய துடிப்பின் இனிய தாளங்கள் ...


தற்போது என் தனிமைகள் அடர்ந்து வெறுமையாகி போகின்றன . . .

கூட்டத்தில் என்னை கண்டால் குதூகலமாகும் உன் இதயம் ,

என்னை கானுகையில் குழந்தையாய் குணம் மாற கண்டிருகேனடி..


அந்த சுகம் அப்படியே நிலைக்க நினைக்க,

நான் எப்படியோ ஆகிப்போனேன்...


என் கிறுக்கலை கூட கவிதையாய் திரித்தெடுத்து

காண்பவருக்கெல்லாம் காட்டி மகிழ்வாய்.

இப்போது என் எழுத்துகள் கூட என்னை ஏளனம் செய்கின்றன,

இல்லா கவிதை பெயரில் எங்களை வதைக்கிறாய் நீயென!!!

நீ இட்ட சட்டம் என நான் கொண்டது எதுவுமில்லை . . .


சீற்றம் கொள்ள யாரும் இல்லை, என்னுடன் சிறிதளவும் எதுவுமில்லை

சண்டைக்கும் யாருமில்லை, அதனால் சமாதானத்துக்கு வேலை இல்லை.


எனக்குள் நானே இவை செய்து தோற்ற படியே வெற்றி காண்கிறேன்.

குழந்தையாய் நீ இட்ட முத்தத்தின் எச்சில் என்றும் காயாதிருக்க

ஈர விழி ரேகை ஒன்றை முகத்தினுள் ஓட விட்டேன்.



நீ என்னை நினைப்பாயா? நீயேனும் என்னை நினைப்பாயா?

என்னை நினைக்கும் நேரம் உனக்கு எங்கிருக்கும்?

நொடிக்கு 100 உட்பிரவேசம். யார் வரவை நீ பார்ப்பாய்?

என் வரவை எதிர் நோக்கு.

ஆண்டுகள் 18 அனுபவம் பெற்ற நீ

சித்ரகுப்தனின் நாட்குறிப்பில் என் நாள் என்று என்று பார்த்து சொல்லேன்.

பின்னிருந்தால் முன்னேற்ற முயற்சி செய்யேன்.

தனிமை மிகவும் கனக்கிறது.

உன்னருகில் நான் என்னருகில் நீயென,,,

மீண்டும் ஒரு வசந்த விழா அனுபவிக்க ஆகுமட்டும் முயற்சி செய்யேன்,

அடுத்தடுத்து உறைந்திருப்போம். . .


என்றும் என்னுள் ஏகாந்த சுவாசமாய்

பன்னீர் பூக்களாய் பாடும் இசையாய்

வசந்த காலமாய் வாழ்பவளே ...

என் எழுத்துகள்

என்றும் உனக்கு சமர்ப்பணம்....

குணா...

மனிதா...


இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைபயணம் - செய்துபார்
விடியல் உனக்காக வரவேற்புகம்பளம்
விரித்து காத்திருக்கும்

உழைப்பென்னும் உளி கொண்டு
செதுக்கிபார் - உன் மனதை

உயிருள்ள சிற்பமாய் காட்சியளிப்பாள்
உன் வெற்றி தேவதை!

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்!

கற்கள் கால்களை பதம்பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை

மனிதா,
நீயும் கடிவாளம் கட்டிய குதிரையாய் - ஓடிப்பார்
உன் இலட்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.!






















என் ஆருயிர் தோழியே !


சில நேரங்கள் ... பல தருணங்கள் ...
சிதறிய சிரிப்புகள்... சிந்தனை தவங்கள்...
நித்தம் நித்தம் தேடுகிறேன் ...
நிச்சயம் கிடைக்காது - என
நிருபணமான பின்பும் ...
உன்னோடு ஊர் சுற்றி
உலக கதைகள் பேசி
தோள்மீது கைபோட்டு
மடிமீது தலை வைத்து
நாம் கடந்து விட்ட காலங்கள்
நாம் நினைத்தாலும் வராது தோழியே ...

நினைவுகளை சுமந்து
கனவுகளை வெல்வோம் ...

இவள் நட்புடன் உன் குணா...





DHIYANALINGAM. . .



Dhyanalingam is an all faith, multi-religion temple established by Sadhguru Jaggi Vasudev. The presiding deity is a lingam(an elliptical form often symbolizing Lord Shiva), which is known as Dhyanalingam, and is said to emit divine energy. It does not ascribe to any particular religion or faith and everyone, irrespective of any faith, is allowed to visit the temple to take part in the divine energy.

A large ellipsoidal dome covers the sanctum sanctorum. The dome was constructed using only bricks and cement stabilized mud mortar without, steel or concrete.[3]

The dome is 76 ft (23.2 m) in diameter and 33 ft (10.1 m) in height. The lingam is 13 ft (4 m) in height made of high density black granite.

The Sarva Dharma Sthamba, located at the front entrance, functions as an icon of singularity, with the sculptural reliefs and symbols of Hinduism, Islam, Christianity, Jainism, Taoism, Zoroastrianism, Judaism, Buddhism, and Shinto inscribed as a universal welcome.


Visitors coming to the Dhyanalinga, can further their experience by attending this daily initiation to the universal and powerful mantra "AUM." This meditation is known to have transcendental qualities. Meditation can bring peace and balance to the one’s system, and is known to relieve people from numerous physical and mental ailments when practiced regularly.

The Dhyanalinga offers a unique set of activities throughout the year aimed at creating and promoting universal values and religious harmony. Daily activities include non-lyrical chants, offered by a talented group of singers, originating from various countries and cultures. These chants allow one to become more receptive to the meditative quality of the space. The focal point of Isha Yoga Center, the Dhyanalinga Yogic Temple is rapidly gaining in its global reputation as being one of the most sought out places for meditation.

6/11/11

Great Words!

Great Saying by Swami Vivekananda!


How truthful words?_AVGS

Swami Vivekananda -My Ideal & Role Model




Swami Vivekananda once said, “If you have lost your wealth, you have lost nothing; if you have lost your health, you have lost something; if you have lost your character, you have lost everything.” I strongly believe in this saying of Swami Vivekananda. Character makes a human being. A person with spotless and indisputable character is invaluable, whereas the wealthiest person without character is not even worth mentioning. A person of character will attract wealth but a wealthy person cannot buy good character even with all his/her wealth. But, sad to note that people now-a-days give more importance to “money” than “character.” Money has become the “only religion” people worship of late.