, இனியவளின் இதய பகிர்வுகள் !

2/12/14

சில நேரங்களில் மட்டுமல்ல ...


சில நேரங்களில் மட்டுமல்ல - வாழ்வின்
பல நேரங்களில் தேவை ,

அன்பானவர்களின் அறிவுரையோ 
ஆலோசனையோ அல்ல...

அவர்களின் பொன்னான, 
கண்ணான சில மணித்துளிகள் ;
நாம் சொல்வதை கேட்பதுதான் ....

அன்றி, 

ஆலோசனையோ அறிவுரையோ அல்ல !

பொதுவாக, 

எதிரில் பேசுபவர் சொல்வதையே 
எப்போதும் கேட்டு கொண்டிருக்க தோன்றும் !
ஏனெனில், கிடைக்க பெறாதவர்க்கே 
கிடைப்பதின் நிம்மதி புரியும் !

ஆதலால் சொல்கிறேன்,

கேட்பதும் சுகமே !
பெறுவதில் கிடைக்கும் சுகத்தை விட
தருதலில் உள்ள சுகம் போல !

- குணா ...

2/4/14

நீ !




அமைதியாய் நான் ...
         
                 ஆர்ப்பாட்டமாய் என்னுள்

                              இசைகச்சேரியாய் நீ !


இன்று....



பாலை வனத்தில்
        மாலை நேரத்தில்
                    மழை சாரல் !

இன்று
     என்னவளின் கச்சேரி !
           என் காதுகளில் மட்டும் !
                      என்றும் வரமாக !

2/1/14

நித்தியமாய் என்னுள்ளே....

துக்கத்தினாலோ
துயரத்தினாலோ  - ஏதோ ஒன்று

தூக்கம் இன்றி
தூக்கலாய் ஒரு இரவு ...

நிசப்தமான அமைதி
நிர்மூலமான இருள் ...


நிச்சயமாய் மிக
நிதர்சனமாய் உன்
நினைவுகள் மட்டும்
நித்தியமாய் என்னுள்ளே....


1/28/14

அதெல்லாம் எனக்கு எதற்கு???

சில உறவுகள்... என்றும் ஆச்சர்யம் தருவது... அன்றும் இன்றும் என்றும்... மறுக்கவும் மறக்கவும் முடியாத உறவுகள்.... "சில" என்று அனைவருக்கும் அமைத்து விட கூடியது இல்லை. என்னை பொறுத்தவரை ஏதோ ஒரு உறவு இந்த வகையில் கண்டிப்பாக ஒரு ஒருவருக்கும் இருக்கும்... இருக்க வேண்டும். வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு கருவி வேண்டாமா ???

அப்படிதான் .. அது அப்படிதான்... வாழ்கையில், ஒரே ஒரு வார்த்தை / ஒரே ஒரு நொடி / ஒரே ஒரு  நிகழ்வு / ஒரே ஒரு உறவு ... ஏதோ ஒரு "ஒரே ஒரு " போதும். நம் வாழ்க்கையினை மாற்றி விட... அப்படியே புரட்டி போட...

எனக்கும் வந்தது... / கிடைத்தது... /... என்றும் வரமாகவே கருதுகிறேன்... ஒரே ஒரு தருணம்... ஒரே ஒரு நாள்... கடைசியாக ஒரே ஒரு உறவு... கருத்துகளை மாற்றியமைத்தது ... தோழியென வந்து... (சந்தேகம் தான் இந்த நிமிடம் வரை ) தோற்ற பிழைகளை சரி செய்தது...

ஏதோ ஒரு வித்யாசம்... புரியலையே...
எனக்கான, எனக்கே எனக்கான நட்பு... என
உரிமை கொண்டாட விட மாட்டாள்.
பட்டென்று தட்டி விடும் குழந்தை குணம்...
சட்டென்று அணைத்து கொள்ளும் தாய்மை உள்ளம்...
எந்த திசையிலிருந்து பார்த்தாலும்
வித்தியாசமான வரம் அவள்...
என்னை புரிந்து கொண்டவள். ...
நான் புரிந்து கொண்டவள் ,,,
என கூட சொல்ல முடியாது...
புரிந்தும் புரியாத,
புரியாமல் புரிந்த என் உலகமவள் ...
பனியும் கனலும் கலந்த
பகலிரவு அவள் என் உலகில்...
நினைவுகளில் அவளை
நிரப்புவதே சுகம் எனக்கு...
சுவாசமின்றி தவிக்கும் போது
சுகந்தமான  சுவாசம் கிடைப்பது போல
சுகமான சுகம் அவள் ...
அவளுக்கு நான் யாரோ? எப்படியோ ?
அதெல்லாம் எனக்கு எதற்கு???
என்னில் எல்லாமுமாக
என்றும் அவள் ... அவள் மட்டுமே ...