, இனியவளின் இதய பகிர்வுகள் !: September 2013

9/28/13

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்....

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.... 
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேணும்.. 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேணும்........ (உண்மைதானே?)


அனைவருக்கும் ஆசை ...



அனைவருக்கும் ஆசை ... அனைவரும் நமக்கு பிடித்தபடி நடக்க வேண்டும் என்று.... சரி அவர்களாவது அவரவர் விருப்பபடி நடந்து கொள்கின்றனரா என்றால் அதும் இல்லை ... இப்படி அடுத்தவரை மகிழ்விக்க முயன்று முயன்று கடைசியில் தனக்கு தேவையான சந்தோஷத்தை தர மறந்து போய் விடுகின்றனர் .... என்ன படிக்கும் போதே குழம்புகின்றதா ?

தினம் தினம் எத்தனை முகமூடிகள் ! சிரித்து சிரித்து எத்தனை வேடங்கள் ! கட்சிகளை மாற்றியமைக்கத்தான் முடிவதில்லை ! அட, நிகழ்வுகளை ஏற்று கொள்ளவும் முடிவதில்லையே ! யாரிடமும் உண்மையில்லை ... முகமூடியறிந்தும் முற்றுபுள்ளி வைக்க இயலாத உறவுகள் பல! 

இத்தனையும் அறிந்திருந்தும், உண்மைகள் புரிந்திருந்தும், பாழும் மனது ஆசை படுகிறது இப்படிங்கோ ::: "வாழ்வது ஒரு நாளாகினும் உண்மையாக, பிடிச்சபடி, முகமூடியில்லாமல், முழுவதுமாக வாழ்ந்து விட வேணும்" என !!! எப்புடி? எப்புடி?




மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?



தினம் தினம் விடிந்து விடுகிறது .... தினம் தினம் இதோ முடிந்தும் விடுகிறது ... இஷ்டமும் சரி, கஷ்டமும் சரி , இரவு பகல் போல மாறி கொண்டுதான் இருகின்றது .... நினைவலைகள் கூட சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் அமைதியாகவும் நெஞ்சினில் அலை மோதுகின்றது ....

இப்படி எல்லாமே மாறி கொண்டிருக்கையில் உங்களை நான் தொலைத்து விட்டு ஏங்கிய 'ஏக்கங்கள்' மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதன் மர்மங்கள் தெரியவில்லை .... ஏனோ நீங்கள் திடீரென வந்துவிட மாட்டீர்களா ? என்ற எண்ணம் தலைதூக்குவதை தடுக்கவே முடியவில்லை என்னால் .... நீங்கள் சொல்லி கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும் இங்கு காணாமலே போய் விடுகின்றன. தேடி பிடிக்கவும் விருப்பமில்லை எனக்கு... எப்போதெல்லாம் தனிமை என்னை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் உங்கள் நினைவுகளே எனக்கு துணை நிற்கின்றன .... எங்கெல்லாம் நான் இருளை உணர்கிறேனோ அங்கெல்லாம் உங்கள் நினைவுகள் தீபமாய் ... எங்கெல்லாம் நான் தடுமாருகிறேனோ அங்கெல்லாம் உங்கள் நினைவுகள் கைதாங்கியாய் ... யாருமற்ற வழிப்பாதையாய், திக்கற்று நான் நிற்கையிலே உங்கள் நினைவுகளை தவிர வேறு என்ன எனக்கு துணையாய் வர முடியும் ....

உலகினை நான் பார்க்க ஜன்னல் திறந்து காமித்துவிட்டு ... உறவுகளை சமாளிக்க நித்தம் சொல்லி கொடுத்துவிட்டு .... உழைப்பிற்கும் உள்ளத்து அன்பிற்கும் அடிபணிய சொல்லித்தந்துவிட்டு... சொல்லாமல் சென்றதென்ன ? மரியாதையின் மறுபெயராய் வாழ்ந்தவர் இப்படி செய்யலாகுமா ?

நித்தம் நித்தம் நான் திணறுகிறேன் ... நிந்தனையால் சிந்தனை மழுங்குகின்றது .... யாருக்காகவோ வாழ்ந்து யார் யாரையோ திருப்திபடுத்த முனைந்து , வாழ்க்கையின் பெரும் பகுதி முடிவடையும் இவ்வுலகில்... நதியில் சிக்கிய சிறு படகாய் தடுமாறுகிறேன் ...

எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கின்றதே ! நீங்கள் திரும்ப வந்துவிடும் அதிசயமும் நடந்தால் தான் என்னவாம் ? நடக்காது என்பது அறிவுக்கு தெரியும் . ஆனால் மனம் நிதம் எதிர்பார்க்கத்தானே செய்கிறது ... பித்து பிடித்த இந்த மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?




9/17/13

நம் கல்லூரி நினைவுகள் ....



மழை பெய்த காலை பொழுது 
காய்ச்சலின் பொழுது அம்மா தரும் காபி 
நிலவுடன் கழிக்கும் மொட்டை மாடி இரவுகள் 
பார்த்தவுடன் சிரிக்கும் பக்கத்து வீட்டு குழந்தை 
இரம்மிய இரவில் காற்றோடு வரும் கீதம் 
கொளுத்தும் கோடையில் முகத்தில் அறையும் தென்றல் 
சோர்ந்த பொழுது எதிர்வரும் தோழனின் புன்னகை 
பச்சை வயல்களுக்கிடையே வரில் ஜன்னலோர  பயணம் 
இவற்றை போல சுகமானது 
நம் கல்லூரி நினைவுகள் ....

தீற்றியவள் 

தீபா ...
           



9/16/13

சென்டிமென்ட்டா? ஆசிரியர்கள் தினத்துக்காக????





சென்டிமென்ட்டா.. ஆசிரியர்கள் தினத்துக்காக.. ஆசிரியர்கள் வாழ்கன்னு எல்லாம் உணர்ச்சிப் பூர்வமா என்னால வாழ்த்து சொல்ல முடியலை பாஸ். ......

இப்படி ஒரு பதிவ நம்ப நண்பர் ஒருத்தர் எழுதி இருந்தார். அவரோட உணர்வுகள் பற்றி தவறு சொல்ல முடியாது. உண்மையா சொல்லணும் என்றால், அப்படி எல்லாரும் அடி வாங்கி இருப்பாங்க ... முதலாம் வகுப்பெடுத்த பங்கஜம் டீச்சர் ..... 5 நிமிடம் லேட் ஆனா கூட ஒரு கிள்ளு கிள்ளுவாங்க பாருங்க .... பயத்துலயே பாதி உசுரு போய்டுங்க ... இரண்டாம் வகுப்பெடுத்த இரத்தினம் டீச்சர் .... அவங்க கைல வெச்சிருந்த பிரம்பு ... தூக்கத்துலயும் மறக்காதுங்க .... மூன்றாம் வகுப்பெடுத்த சின்ன அய்யா ... அதிர்ந்து கூட பேச மாட்டாருங்க .... ஆனா தப்பு பண்ணா அவ்ளோதான் ... வெளில நிக்க வெச்சுடுவாருங்க ... நான்காம் வகுப்பெடுத்த தெய்வானை டீச்சர், ஐந்தாம் வகுப்பெடுத்த சாரதா டீச்சர் இப்படி ஒரு ஒருத்தருக்கும் ஒரு அடையாளங்கள் .... (இதுக்கு மேலயும் உண்டு... ஹை-ஸ்கூல் , கல்லூரி இப்படி பட்டியல் போயிட்டே இருக்கும் ,....)

இந்த அடையாளங்களை அவங்களுக்கென நாமதாங்க உருவாக்கினோம் ??? கொஞ்சமா குறும்பு பண்ணினா அவங்களும் சொல்லறதோட நிருத்தியிருப்பங்க ///  .... என்னை கேட்டால் , அவங்கெல்லாம் பொறுமையின் சிகரம் . நமக்காக கத்தி, டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துகிட்டிருகாங்க ... சில உண்மைகள் கசக்கும் .... 

என்னதான் இப்படி அடிச்சு, மிரட்டி, நமக்கு டீச்சர் அஹ இருந்திருந்தாலும், இன்னைக்கு நாம பொய் அவங்களுக்கு மரியாதையாக, பாசமாக 2 வார்த்தை பேசி பாருங்க .... அவங்க மனசுல இருந்து பொங்கும் சந்தோசம் கண்களில் தெரியும் .... மாணவன், மாணவி என்று பெருமையா சொல்லுவாங்க பாருங்க , அங்க தெரியும் அவங்க பாசம் ... நாம பண்ண தவறுக்களை எல்லாம் மறந்து நம்மகிட்ட பேசும் போது நமக்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் ....

உண்மையாகவே இன்ற நாள் இப்படி பல உணர்வுகளை தட்டி எழுப்பற நாள்தாங்க என்னை பொறுத்தவரை ....

ஒரு ஒரு ஆசிரியரும், என்னை பொறுத்தவரை நம் வாழ்வெனும் சிற்பத்தை செதுக்க கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட சிற்பிகள் ...

அவர்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரியலங்க... ஆனா, ஒரு ஒரு தருணங்களிலும் நினைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள் ... வாழ்கையின் ரொம்ப செண்டிமெண்ட் பக்கங்களில் முக்கியமான பக்கம் இந்த 'ஆசிரியர்கள்'.

இது என்னோட உணர்வுகள் ... இப்படி ஒரு ஒருத்தருக்கும் இது மாறுபடலாம் ...

பல வித எண்ணங்களும் வண்ணங்களும் கலந்ததுதானே நம் வாழ்க்கை? ....

இவள்

இசையானவள் ... 05/09/2013


புரிதலின் அர்த்தமென்னவோ?

கனவுகளால் கட்டப்பட்ட
காட்டு குருவியின் கூடு ...
காத்தடித்தால் களைந்து போகும் ...
காட்டு குருவிக்கும் இது தெரியும் ...

தெரிந்திருந்தும் எதிர்காலம்
புரிந்திருந்தும் இங்கு
இதன் நோக்கமென்ன?
புரிதலின் அர்த்தமென்னவோ?

அன்றைய வாழ்வை
அன்றே வாழ்ந்து விடுகிறதோ ?


                                                                                           இவள் 
                                                                                          
                                                                                                  இசையானவள் ...