, இனியவளின் இதய பகிர்வுகள் !: January 2013

1/30/13

ஆறுதலுக்காக அல்ல...


 

வாடி என் தங்கமே ...
வந்து பதில் உரைபாயடி...

ஒரு நாளா இரு நாளா
ஓரிரு மண்டலமென 29 நாட்களாடி ...

இயேசு பிதாவிற்கு 40 நாட்கள்
இதயம் உருகி தவமிருக்கிறாய் ... இந்த

ஏமாந்த அபலைக்கு 29 நாட்கள்
ஏகாந்தமாய் விரதமிருக்க போகிறாயா?

எத்தனை இழந்தாலும் - நானோ
உன்னை இழந்துவிடாமலிருக்க போரிட்டேன் ...

அன்றென்னை  விட்டுகொடுத்ததுமின்றி  - நீயோ
இன்றென்னை இழந்துவிட போரிடுகிறாய் ...

இதற்காகவா போராடினேன் ?
எதற்காக சீராடினேன் ?

என்றென்றும் பசுமையான நட்பெங்கே?
என்றென்றும் வீசிவரும் தேன்றலெங்கே ?

பால் சிந்தும் பவுர்ணமியெங்கே ?
தேன்  சிந்தும் புன்னகையெங்கே ?

ஆறுதலுக்காக அல்ல - இவை (இந்த)
ஆறாத காயங்கள் ...

ஆறுதல் தேடி நான்
அலைந்திருந்தால் இன்று

அரவணைப்பில் மட்டுமின்றி
ஆனந்தமாகவும் நானிருப்பேன் ....

அத்தனை இதயங்களும் உங்களை போல
அரவணைத்து ஏமாற்றுவதில்லை அகிலத்தில் ...


பின்குறிப்பு :
                      இத்தனைக்கு பிறகும் இந்த ஆறுதலை எப்படி ஒரு ஏமாற்றிய மனித ஜென்மத்திடம் தேட  முடியும் ? உயர்வான "ஆறுதல்கள்" உயர்ந்த உள்ளங்களிடம் மட்டுமே கிடைக்கும் என உணர்ந்தேன் ... வாழ்வாதாரத்திற்காக வஞ்சம் தீர்க்கும் மனிதர்களிடம் என்ன எதிர் பார்க்க ? பாசத்தினை வேஷம் போடும் மனித மிருகங்களிடம் காட்டி என்ன பயன் ? உயிர் போனாலும் உள்ளுளவு செய்ய கூடாதென நானிருக்க, தமிழர் நெறி மறந்து என்னை நடுவில் வைத்து பகடை ஆடியதென்ன ? மனைவியை வைத்து சூதாடியதால் "மகாபாரதம்". "நட்பினை" வைத்து சூதாடிய இவர்களிடமிருந்து என்ன காப்பாற்ற யார் வருவார்கள்?  எனக்கென்ற ஒரு தோழி என்றேன் ! அதனால்தானோ சுயநல சூதாட்டத்தில் சூத்திரதாரியாகி என்னை பகடையென  சுழற்றி போட்டாள் ! 

                        அத்தனையும் மன்னிக்கிறேன் ... அன்பே வந்து விடு ஏன் அடுத்து வரும் பக்கங்களில் ... யாரோ என்னை ஏமாற்றவில்லையே , என் உயிரினில் கலந்த ஒரு நேசம் தானே தடம் மாறி போனது ... இருப்பினும் என்ன ஒரு கை தேர்ந்த நடிகை தெரியுமா? இந்த 29 நாட்கள் ... எனக்கு காட்டியது / எனது கேள்வியெல்லாம்... ஏன் இந்த நாடகம் ? எனக்கும் தெரியும் ... என்  மனமே நீதானடி என்று கூறினாயல்லவா ? நீ உணவருந்த , ஏன் வயிரல்லவா நிறையும் ... அப்படியிருக்க உன் மனம் என்னிடம் தானே உண்டு. தவறு தவறு. உன் மனமே நானல்லவா ? நேற்றுதான் என்னிடம் கேட்டேன். உன் மனம் கூறியது....

                        என்னடா , கடவுள் காட்சிகளை மாற்றி போடுகிறார், என்  வாழ்வில் நடந்ததெல்லாம் , என்  கண் முன்னே நடக்கிறதே என வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் ...... இப்போதல்லவா புரிகிறது....  எனக்கு தெரியாமல் எனக்கு எழுதப்பட்ட முடிவுரையை நானும் ஏன் கண்முன்னே நடக்கும் காட்சிகளுக்கு எழுத வேண்டுமென தேவன் புரிய வைத்தான்...

                    எழுதுகிறேன் ... ஏகாந்த புன்னகையோடு .... இன்றே.... 31.01.2013....



1/28/13

என்னில் எல்லாமுமாக நீ ...




என்னில் எல்லாமுமாக நீ ...
உன்னில் எதுவுமற்று நான் ...

ஏனோ என்னில்  வந்தாய் ...
எதோ  வலியினை தந்தாய் ...

நடுவினில் நானும் 
மடுவினில் மடிந்தேன் ...

பட்டு கரம் தராமல் 
விட்டு நீயும் சென்றதென்ன ?

உன்னை பற்றி எழுதினாலோ 
உதட்டோரம் புன்னகை....

உள்ளம் அழுதாலும் 
உதடுகள் சிரிக்கணுமாம் ? ?





1/27/13

ஒருநாள் ...


இத்தனை நாள் என்
அத்தனை எண்ணங்களுக்கும் ....

இடம் தந்த வள்ளலாக ...
மடம்  தந்த செம்மலாக .....

வெகு விரைவில் நானும்
நெடு தூரம் போக போகிறேன் ....

சொல்லிவிட்டுதான்  போவேன் - உன் நினைவுகளை
அள்ளிகொண்டுதான்  போகபோகிறேன் ....





1/24/13

நித்தம் நித்தம் ஏகாந்தம் ...



என்னவென்று நான் சொல்ல?

மெல்ல மெல்ல என்னை வெல்ல 
செல்ல செல்ல சண்டை போட 

எனக்கென்ற ஒரு இதயம் 
என்  முன்னே இன்று உதயம் ...

கவிகளை அள்ளி தந்து 
செவிகளை மெல்ல நிறைத்து 

நித்தம் நித்தம் ஏகாந்தம் ...
நிமிடமெல்லாம் நித்யானந்தம் ....

1/15/13

ஒரு தமிழச்சியின் கனவு ...


கரும்பினை கட்டிக்கொண்டு  தூங்கிய         
காலங்கள்  கனவோடு   மட்டுமே ....
பொங்கிடும்  பொங்கலோடு  மனமும் 
பொங்கிடும்  அதிசய தருணங்கள் ....

நகரத்து  பொங்கலும் 
நாகரீகமென  பொங்குகிறது 
நடுவீடதில் டிவி பெட்டியினில் ....

களமெல்லாம்  கூட்டி 
கண்ணை  கவரும் வண்ணங்களில் 
கோலங்களால் நிரப்பிடும் 
காட்சிகள்  இன்று  கணிப்பொறிகளில் ....

கரும்பும் இல்லை 
கனி  பொங்கலும் இல்லை
கரைந்து விட்டது 
கல்லூரி  விடுமுறையும் ...

இனிவரும்  பொங்கலாவது 
இனிக்கட்டும் எனும் ஆவலில் 
இவள் 
தமிழ் ... 


1/9/13

........ (.......)

உனது  விழிகளில்
எனது கனவுகள் ...

கண்களை பறித்து கொண்டு
காற்றோடு மறைந்ததென்ன ?

உனது பேச்சினில்
எனது எண்ணங்கள் ...

பேச்சினை நிறுத்தி
மூச்சு திணறலும் தினம் ஏனோ?


1/3/13

இதயத்தின் மெல்லிய ஜதி ...




உந்தன்

ஒற்றை பார்வை 
பட்டு தீண்டல் 
மொட்டு புன்னகை 
சிந்தும் இதழ்மொழி 
சின்ன சண்டை 
செல்ல கொஞ்சல் 
சொல்லிய காதல் ...

எந்தன்


மழை மேக மயக்கம் 
மென்மையான ரோஜா 
மலரபோகும் தாமரை 
சிதறும் மல்லிகை 
சாயுங்கால சந்தன முல்லை 
நதியின் வேகம் 
இதயத்தின் மெல்லிய ஜதி ...

தொடும் வானமாய் ....

தூரத்தில் நிலவொன்று
துடிக்கின்ற நெஞ்சமொன்று ...

தொடும் வானமாய்
தொட்டுவிடும் தூரத்தில்

சற்று கண் பார்த்தாலென்ன ?
வெற்று  சிரிப்பு  நீயும்
பெற்று தந்தாலென்ன ?

ஒரு கரைதனில் நானும்
மறு கரைதனில் நீயும்

தயக்கம் கொண்டு நிற்பதென்ன ?
மயக்கம் கொண்டு மருகுவதென்ன ?


1/2/13

நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....



உறவுகள்  உதறிவிட 
பாசங்கள் பறந்துவிட ...

நடக்கட்டும் நல்லபடி 
நாடகங்கள் நாள்தோறும் ...

எதையோ எதிர்பார்த்து 
எங்கோ ஏமாந்து ....

நடுத்தெருவில் நிற்கிறேன் 
நன்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....


1/1/13

மரணத்தின் முகவரி தேடி ...



சட்டென்று உன்னை பார்க்க 

சாய்ந்தே கொஞ்சம் போனேனே !

விதி வலியதா ?

சதி வலியதா ?

மதி வலியதா? தெரியாது ...

ஆனால் 

வலி வலியது ...

நெஞ்சமெங்கும் பாரம்,,,,
கண்களிலும்  ஈரம் 
காய்ந்து போய்விட ,

பைத்தியம் பிடிக்குமோ ?
பாதியில் சாவேனோ ?

வழியும் தெரியவில்லை ...
வலி தீர ......


சத்தியத்திற்கு கட்டுப்பட்டு
சவமாய் வாழ்கிறேன் ....

பெயர் தெரியாது வீதிகளில் 
என்  பயணம் 
உன் நினைவுகளோடு 
மரணத்தின் முகவரி  தேடி ...