அடித்த தாயிடமே
அரவணைப்பை நாடும்
சேயாய் நானும்...
வார்த்தைகள் மறந்து
வாசங்கள் தீர்ந்து
வாக்கியமற்று நானும் ...
நாடோடி தென்றலென
நாட்டுபுற கீதமென
உன்னை தேடி களை(லை)கிறேன்
நிதமும் நானும் ....
அரவணைப்பை நாடும்
சேயாய் நானும்...
வார்த்தைகள் மறந்து
வாசங்கள் தீர்ந்து
வாக்கியமற்று நானும் ...
நாடோடி தென்றலென
உன்னை தேடி களை(லை)கிறேன்
நிதமும் நானும் ....
தூணிலும் இருப்பாயாம்
துரும்பிலும் இருப்பாயாம்- என்
அணுவிலும் இருக்கிறாயோ
என் நாத தேவனே 🕉️