, இனியவளின் இதய பகிர்வுகள் !: December 2012

12/5/12

பஞ்சபூத சக்திகளே , கொஞ்சம் சக்தி தந்துதவ வேண்டுகிறேன் !

அன்பு கொண்ட நெஞ்சத்தை 
பண்பினால் தள்ளி வைத்தேன் . . .


துன்பத்திலிருந்து என்னவளை - நானும் 
கண்கொண்டு காப்பாற்ற,

விதியுடன் போட்டியிட்டு 
சதியினை வென்றிடுவேன் ...

நிலவு மகள் செய்திட்ட 
மதிகெட்ட தவறுகளால் - நானும் 
சிரம் தாழ்ந்து நிற்கிறேன் ...


செய்வதறியாமல் நானும் 
மெய்கலங்கி நிற்கிறேன் !

பஞ்சபூத சக்திகளே ,
கொஞ்சம் சக்தி தந்துதவ வேண்டுகிறேன் !

மன்னித்தாலும் மறத்தலும் 
என்றென்றும் தர்மமல்லவா ?

சான்றோரும் ஆன்றோரும் 
சொல்லிசென்ற நெறியல்லவா ?

ஏற்றுக்கொள்ள மறுப்பதேன் ?
சினம் கொண்டு வெறுப்பதேன் ?

பாசமும் நேசமும் இருபக்கம் ....
அஹிம்சையும் அன்பும் இருபக்கம் ....

நெஞ்சம் விம்மியழுது 
கொஞ்சமும் தாங்க  முடியலையே ...

ஆறுதல் சொல்லவும் யாருமில்லை ...
ஆலோசனை தரவும் யாருமில்லை . . .