, இனியவளின் இதய பகிர்வுகள் !

6/17/13

காலத்தால் அழியாது ...


புது புத்தக வாசம் 
புத்தாடைகளின் சலசலப்பு 

தெரியாத முகங்கள் 
அறியாத அச்சங்கள் 

பெருமிதமாய் பெயர் சொல்லி 
சிறு பிள்ளையென நான் செல்ல 

அம்மாவின் கையசைப்பில் 
அப்பாவின் புன்னகையில் 

பிரிய மனமில்லாமல் 
மெல்ல நுழைந்தேன் .....

நினைக்கையில் இனிக்கிறது 
நெஞ்சமெல்லாம் கனக்கிறது ...

பள்ளிதனை நான் கடக்கையிலே 
நெஞ்சமது நகர மறுக்கிறது ...

பட்டங்கள் பெற்றாலும் 
சட்டங்கள் தெரிந்தாலும் 

கபடமற்ற குழந்தைப்பருவம் 
கற்றுத்தந்த பாடமெல்லாம் 
                      காலத்தால் அழியாது ...


2/26/13

உயிரோடு ஒரு பாடல் ...

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு தொன்னையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் போருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


2/12/13

தோழிக்கான ஒரு பிராத்தனை

அட என்னங்க....

முன்னுரை எழுதியாச்சு . முடிவுரை வேண்டாமா ? (நீங்க திட்றது கேட்குதுங்க, ஊர் வந்ததும் ஊடகத்தை தேடி ஓடி வந்தேன் ... )

கொஞ்சம் பிஸி ... அதான் .

சரி சரி விஷயத்துக்கு வருவோம்.

நான்  எழுதின முன் பதிவினில் ஒரு தோழி யின் கண்ணீரை பகிந்துகிட்டேன் .... சரியானு தெரியல . ஆனா ஏன் மனசுல இருந்த பாரத்தை இறக்கி வைக்க இடம் தெரியலைங்க .....

அவளுக்கு நான் தந்த யோசனை இந்த பதிவினில் உங்களோட பகிந்துக்க விரும்பறேங்க ... வழக்கம் போல உங்க கருத்துரைகளை நீங்களும் கூறலாம். நன் சொன்னது சரியாய் தவறா என தெரியாது.

*****************************


போனது போகட்டும் ...
போகிஎன முடியட்டும் ...

நல்ல உள்ளங்கள்
நாளும் உனக்காக ....

ஒரு கதவு மூடினால்
மறு கதவு திறந்திருக்கும்

கண் திறந்து நீயும்
காட்சி நோக்க வேணும் ...

சுயநல உலகம்தான் ...
சூட்சிகள் சூழலும்தான் ...

பெண்ணே நீ பதறாதே ...
கண்ணீர்தனை சிந்தாதே ... 

கடமைகள் காத்திருக்க
மடமையென இருப்பதேன் ?

நீ கொண்ட பாசம்
தாய் கொண்ட நேசம் ...

உன் நட்பு - அவளுக்கு  ஏனோ
கொடுத்து வைக்கவில்லை...

கண்ணீர் சிந்தியது போதும் ...
காட்சி பிழைகளும் போதும் ...

பன்னீர் பூக்களும் உனக்காக...
பாச மழையும் உனக்காக ...

நித்தம் நித்தம் நிம்மதி
சித்தமெல்லாம் சிவ சந்நிதி ...

நட்பும் வாழ்க்கைதான்
நட்பு  மட்டும் வாழ்க்கையல்ல ....

*******************************

இப்படி ஏதோதோ சொல்லி (உளறி) அவளை தேற்றினேன் (நினைத்தேன்). நீங்களே சொல்லுங்க... ஏமாற்றி நட்பு மட்டும் தான் வாழ்க்கையா ? எந்த மனிதனின் மனதினில் சோகங்கலில்லை ? ஏமாற்றங்கள் இல்லை ? கண்ணீர் இல்லை ? எல்லாமே இருக்குங்க ... ஏனோ வெளில சிரிசுகிட்டு , Hi , how  are you கேட்கற நாடக நடிகர்கள் கிட்ட yeah , I  am  fine  என சொல்லிட்டு போய்கிட்டு தன இருகாங்க பய புள்ளைங்க ....

நானும் உங்கள கேட்கறேன் "எப்படி இருக்கீங்க? சுகம் தானே ?" . மனசுல கை வெச்சு சொல்லணும் நாடக பிரதியா  நான் கேட்கல. அன்பின் சாட்சியாக கேட்கிறேன் ? சொல்லுங்க பாக்கலாம்.

சரிங்க . கடைசியா ஒரு சின்ன வேண்டுகோல் . உங்களுக்கு அறிமுகம் இல்லாமல், உங்களில் ஒரு நாடக பிரதிநிதியாய், உங்களில் ஒரு மானுட பிறவியாய்  வலம் வரும் என்  தோழிக்காக  ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள் .... அவள் மனம் நலம் பெற ....
***********




1/30/13

ஆறுதலுக்காக அல்ல...


 

வாடி என் தங்கமே ...
வந்து பதில் உரைபாயடி...

ஒரு நாளா இரு நாளா
ஓரிரு மண்டலமென 29 நாட்களாடி ...

இயேசு பிதாவிற்கு 40 நாட்கள்
இதயம் உருகி தவமிருக்கிறாய் ... இந்த

ஏமாந்த அபலைக்கு 29 நாட்கள்
ஏகாந்தமாய் விரதமிருக்க போகிறாயா?

எத்தனை இழந்தாலும் - நானோ
உன்னை இழந்துவிடாமலிருக்க போரிட்டேன் ...

அன்றென்னை  விட்டுகொடுத்ததுமின்றி  - நீயோ
இன்றென்னை இழந்துவிட போரிடுகிறாய் ...

இதற்காகவா போராடினேன் ?
எதற்காக சீராடினேன் ?

என்றென்றும் பசுமையான நட்பெங்கே?
என்றென்றும் வீசிவரும் தேன்றலெங்கே ?

பால் சிந்தும் பவுர்ணமியெங்கே ?
தேன்  சிந்தும் புன்னகையெங்கே ?

ஆறுதலுக்காக அல்ல - இவை (இந்த)
ஆறாத காயங்கள் ...

ஆறுதல் தேடி நான்
அலைந்திருந்தால் இன்று

அரவணைப்பில் மட்டுமின்றி
ஆனந்தமாகவும் நானிருப்பேன் ....

அத்தனை இதயங்களும் உங்களை போல
அரவணைத்து ஏமாற்றுவதில்லை அகிலத்தில் ...


பின்குறிப்பு :
                      இத்தனைக்கு பிறகும் இந்த ஆறுதலை எப்படி ஒரு ஏமாற்றிய மனித ஜென்மத்திடம் தேட  முடியும் ? உயர்வான "ஆறுதல்கள்" உயர்ந்த உள்ளங்களிடம் மட்டுமே கிடைக்கும் என உணர்ந்தேன் ... வாழ்வாதாரத்திற்காக வஞ்சம் தீர்க்கும் மனிதர்களிடம் என்ன எதிர் பார்க்க ? பாசத்தினை வேஷம் போடும் மனித மிருகங்களிடம் காட்டி என்ன பயன் ? உயிர் போனாலும் உள்ளுளவு செய்ய கூடாதென நானிருக்க, தமிழர் நெறி மறந்து என்னை நடுவில் வைத்து பகடை ஆடியதென்ன ? மனைவியை வைத்து சூதாடியதால் "மகாபாரதம்". "நட்பினை" வைத்து சூதாடிய இவர்களிடமிருந்து என்ன காப்பாற்ற யார் வருவார்கள்?  எனக்கென்ற ஒரு தோழி என்றேன் ! அதனால்தானோ சுயநல சூதாட்டத்தில் சூத்திரதாரியாகி என்னை பகடையென  சுழற்றி போட்டாள் ! 

                        அத்தனையும் மன்னிக்கிறேன் ... அன்பே வந்து விடு ஏன் அடுத்து வரும் பக்கங்களில் ... யாரோ என்னை ஏமாற்றவில்லையே , என் உயிரினில் கலந்த ஒரு நேசம் தானே தடம் மாறி போனது ... இருப்பினும் என்ன ஒரு கை தேர்ந்த நடிகை தெரியுமா? இந்த 29 நாட்கள் ... எனக்கு காட்டியது / எனது கேள்வியெல்லாம்... ஏன் இந்த நாடகம் ? எனக்கும் தெரியும் ... என்  மனமே நீதானடி என்று கூறினாயல்லவா ? நீ உணவருந்த , ஏன் வயிரல்லவா நிறையும் ... அப்படியிருக்க உன் மனம் என்னிடம் தானே உண்டு. தவறு தவறு. உன் மனமே நானல்லவா ? நேற்றுதான் என்னிடம் கேட்டேன். உன் மனம் கூறியது....

                        என்னடா , கடவுள் காட்சிகளை மாற்றி போடுகிறார், என்  வாழ்வில் நடந்ததெல்லாம் , என்  கண் முன்னே நடக்கிறதே என வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் ...... இப்போதல்லவா புரிகிறது....  எனக்கு தெரியாமல் எனக்கு எழுதப்பட்ட முடிவுரையை நானும் ஏன் கண்முன்னே நடக்கும் காட்சிகளுக்கு எழுத வேண்டுமென தேவன் புரிய வைத்தான்...

                    எழுதுகிறேன் ... ஏகாந்த புன்னகையோடு .... இன்றே.... 31.01.2013....



1/28/13

என்னில் எல்லாமுமாக நீ ...




என்னில் எல்லாமுமாக நீ ...
உன்னில் எதுவுமற்று நான் ...

ஏனோ என்னில்  வந்தாய் ...
எதோ  வலியினை தந்தாய் ...

நடுவினில் நானும் 
மடுவினில் மடிந்தேன் ...

பட்டு கரம் தராமல் 
விட்டு நீயும் சென்றதென்ன ?

உன்னை பற்றி எழுதினாலோ 
உதட்டோரம் புன்னகை....

உள்ளம் அழுதாலும் 
உதடுகள் சிரிக்கணுமாம் ? ?