, இனியவளின் இதய பகிர்வுகள் !

3/13/14

எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?

வரமா இல்லை சாபமா...
புரியா வாழ்க்கை இது தானோ....

தில்லை நாதா - வந்தென்னை
கொள்ளை கொண்டு போனாலென்ன ?

வரமாகிலும் சாபமாகிலும்
கசக்கும் வாழ்வும் இதுவன்றோ...

விடைகள் கேட்டு உந்தன் பாதம்
பணிந்தேன் சொல்வாயோ.....

விடைதான் இல்லை என்றாலும்
விடைபெற்று நான் எங்கு போவேனோ?

மனமும் இல்லை குணமும் இல்லை
தினமும் தொல்லை... வாராயோ ?

மனமும் தந்து, குணமும் தந்து
எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?


2/12/14

சில நேரங்களில் மட்டுமல்ல ...


சில நேரங்களில் மட்டுமல்ல - வாழ்வின்
பல நேரங்களில் தேவை ,

அன்பானவர்களின் அறிவுரையோ 
ஆலோசனையோ அல்ல...

அவர்களின் பொன்னான, 
கண்ணான சில மணித்துளிகள் ;
நாம் சொல்வதை கேட்பதுதான் ....

அன்றி, 

ஆலோசனையோ அறிவுரையோ அல்ல !

பொதுவாக, 

எதிரில் பேசுபவர் சொல்வதையே 
எப்போதும் கேட்டு கொண்டிருக்க தோன்றும் !
ஏனெனில், கிடைக்க பெறாதவர்க்கே 
கிடைப்பதின் நிம்மதி புரியும் !

ஆதலால் சொல்கிறேன்,

கேட்பதும் சுகமே !
பெறுவதில் கிடைக்கும் சுகத்தை விட
தருதலில் உள்ள சுகம் போல !

- குணா ...

2/4/14

நீ !




அமைதியாய் நான் ...
         
                 ஆர்ப்பாட்டமாய் என்னுள்

                              இசைகச்சேரியாய் நீ !


இன்று....



பாலை வனத்தில்
        மாலை நேரத்தில்
                    மழை சாரல் !

இன்று
     என்னவளின் கச்சேரி !
           என் காதுகளில் மட்டும் !
                      என்றும் வரமாக !

2/1/14

நித்தியமாய் என்னுள்ளே....

துக்கத்தினாலோ
துயரத்தினாலோ  - ஏதோ ஒன்று

தூக்கம் இன்றி
தூக்கலாய் ஒரு இரவு ...

நிசப்தமான அமைதி
நிர்மூலமான இருள் ...


நிச்சயமாய் மிக
நிதர்சனமாய் உன்
நினைவுகள் மட்டும்
நித்தியமாய் என்னுள்ளே....