, இனியவளின் இதய பகிர்வுகள் !: October 2014

10/31/14

அன்பான உறவுக்கு ...

அன்பான உறவுக்கு ...

ஆண்டுகள் பல வாழலாம். ஆளுமைகள் நிறைந்தும் இருக்கலாம். ஆச்சர்யங்கள் பல நிகழலாம். ஆதர்சன உண்மைகள் மனம் ஆட்டி படைக்கலாம். கணம் மறந்து மெல்ல பறக்கலாம். கண்ணீரில் கரைந்து போகலாம். காட்சிகளில் உறைந்து போகலாம். இப்படி எத்தனை எத்தனையோ நிகழ்ந்து கொண்டிருக்கலாம் ஒவ்வொரு வாழ்விலும்... ஒவ்வொரு கண நேரமும் மாறி கொண்டிருக்கலாம். 

இப்படிதான் பெண்ணே என் வாழ்வும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. நள்ளிரவில் கேட்கும் மெல்லிசை போல , சந்தடிகளுக்கு நடுவில் கேட்கும் உயிர் தொடும் பாடல் போல, தூக்கத்தில் மெல்ல சிரிக்கும் சிசுவை போல, வானவில்லோடு பேசும் சிறு மலை சாரல் போல, புது புத்தக வசம் போல .... மனதில் மாறாத பாசம் நீ என்பதை நீ அறிவாயா ? ? ? ஏன் வாழ்வின் அடி ஆதாரம், அட்சரம் பிறழாமல் நீ என்பதை அறிவாயா??? 

அனைவருக்கும் அத்தனையும் கிடைப்பதில்லை. கிடைத்ததெல்லாம் அனைவராலும் அனுபவிக்கபடுவதில்லை ...இழப்புகள் இன்றி வாழ்கையில்லைதான்...இழப்புகளை சரி செய்யும் இலக்கு அனைவருக்கும் வாய்ப்பதில்லை... அத்தனை அத்தனையுமாய் அமைந்தது உன் உறவு எனக்கு மட்டும் ஏனோ ???

இன்றி ஏது ???

பகிர்தல்கள் இன்றி

புரிதல்கள் ஏது ?

வேண்டுதல்கள் இன்றி
விடுதலைகள் ஏது ?

தண்டனைகள் இன்றி
தவறுகள் ஏது ?


ஒன்றென்றஒன்று  இன்றி
மற்றொன்று ஏது???

இவள்

இனிமையானவள்