, இனியவளின் இதய பகிர்வுகள் !: April 2014

4/17/14

மங்களம் தொடங்கிட்ட மகத்தான நேரம்....

சித்திரை திங்கள் 1 ம் தேதி, திங்கள் கிழமை மாலை 4.30-5.30 சுபயோகம் கூடிய சுப நேரத்தில் .......................................................


கண்டேன் கண்டேன் ....
கண்முன்னே அதிசயங்கள்
நானும் கண்டேன் !

மஞ்சள் முகத்தில்
மருதாணி வெட்கம் !

பன்னீர் வாசத்தில்
பவளமல்லி பந்தல் !

என் தேவியின் கையோடு
அவள் தேவன் கை சேர்ந்திட
அச்சாரம் போடப்பட்டது,
அட்சதைகள் தூவிட ....................


மாவிலை தோரணம் ....

...............................................................................................................................................................................................................................................................................................................................

பங்குனி திங்கள் 30ம் நாள் , ஞாயிற்று கிழமை, காலை 7.30-8.30 மணி நேரத்தில்.... சுப யோகம் கூடிய சுப நேரத்தில் .....



4/1/14

நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்...

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ
(நீதானே நாள்தோறும்……)
ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்
(நீதானே நாள்தோறும்…..)
நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த நீ
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த நீ
வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் …நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்...