கனவுகள் கலையாமல் காட்சியாக்க கடுமையாக உழைப்பவள் . . . இறைபக்தி உடன் இணைந்து உற்சாகமாய் வாழ்க்கை பயணம் செய்து கொண்டிருப்பவள் . . . அன்பினால் அழகினை தரித்து வாழ்பவள் ... எண்ணங்கள் எங்கோ இழுத்து செல்லும் ... எடுத்து சொல்ல யாரையோ தேடும் ... எங்கும் சிதற விடாமல் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் .... இவள் இனியவள் !
3/30/14
கோபங்கள்...
கோபங்கள் கூட
காத்திருக்கும்...
என்னவளின் அழகுக்கு
அழகு சேர்க்க....
காத்திருக்கும்...
என்னவளின் அழகுக்கு
அழகு சேர்க்க....
தேடல்கள்....
உன் நிழல் தேடும்
எந்தன் கால்கள்
உன் மடி தேடும்
எந்தன் சிரசு
உன் புன்னகை தேடும்
எந்தன் கண்கள்....
தேடலில் இன்றி
வாழ்வுமில்லை !
எந்தன் கால்கள்
உன் மடி தேடும்
எந்தன் சிரசு
உன் புன்னகை தேடும்
எந்தன் கண்கள்....
தேடலில் இன்றி
வாழ்வுமில்லை !
என் பிள்ளையின் முத்தம்...
13.41... 30-03-2014
நாட்கள் நகர்ந்தாலும் - என்
நம்பிக்கைகள் மாறுவதில்லை...
பிஞ்சு குழந்தையென - உன்
சுண்டு விரல் தொட்ட
அந்நாள் தொடர்ந்து
இந்நாள் வருகிலும்
கட்டியிளுக்கிறாய் பாசத்தில்
மயக்கி வெல்கிறாய் நேசத்தில்...
காவிரியாத்து காத்து போல - என்
கவிகளின் ஊத்து போல
எப்போதும் நீ - எந்தன்
நெஞ்சோடு ஜீவனாக....
சுவாசத்தில் வாசமாக...
கைகளில் குழந்தையென ...
மடிதரும் தாயென ...
ஏதோவொரு ரூபத்தில்
எப்போதும் சூழ்ந்திருப்பாயடி !
கடவுளை போல நீ
கண்ணுக்கும் தெரியாமல்
காலமெல்லாம் சேர்ந்திருப்பாயடி என்னோடு....
இவள்...
உன் இதயமானவள்....
3/13/14
எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?
வரமா இல்லை சாபமா...
புரியா வாழ்க்கை இது தானோ....
தில்லை நாதா - வந்தென்னை
கொள்ளை கொண்டு போனாலென்ன ?
வரமாகிலும் சாபமாகிலும்
கசக்கும் வாழ்வும் இதுவன்றோ...
விடைகள் கேட்டு உந்தன் பாதம்
பணிந்தேன் சொல்வாயோ.....
விடைதான் இல்லை என்றாலும்
விடைபெற்று நான் எங்கு போவேனோ?
மனமும் இல்லை குணமும் இல்லை
தினமும் தொல்லை... வாராயோ ?
மனமும் தந்து, குணமும் தந்து
எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?
புரியா வாழ்க்கை இது தானோ....
தில்லை நாதா - வந்தென்னை
கொள்ளை கொண்டு போனாலென்ன ?
வரமாகிலும் சாபமாகிலும்
கசக்கும் வாழ்வும் இதுவன்றோ...
விடைகள் கேட்டு உந்தன் பாதம்
பணிந்தேன் சொல்வாயோ.....
விடைதான் இல்லை என்றாலும்
விடைபெற்று நான் எங்கு போவேனோ?
மனமும் இல்லை குணமும் இல்லை
தினமும் தொல்லை... வாராயோ ?
மனமும் தந்து, குணமும் தந்து
எனை ஆட்கொல்வாயோ தில்லை நாதா ?
Subscribe to:
Posts (Atom)