, இனியவளின் இதய பகிர்வுகள் !: December 2013

12/24/13

என் ஜெகமெல்லாம் நிறைந்தவளிடம் ஒரு பகிர்வு....

ஜெகமெல்லாம் நிறைந்தவளே.... உன்னுடனான எந்தன் உறவு ... உலகில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைக்க தோன்றுகிறது... தினம் தினம் அதிசயமாகவே தோன்றுகிறாய்... படிக்க படிக்க புதிதாக இருக்கும் புத்தகம் போல நீ... கோடி கணங்கள் உன்னோடு கடந்தாலும் உன்னில் கற்று கொள்ளவும், பெற்று கொள்ளவும் ஏராளமாக வைத்திருப்பாய்.... உன்னை புரிந்து கொண்டது போலவும் இருக்கும்... புரியாத புதிர் போலவும் இருக்கும்... இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கிடைத்த நட்பு உன்னுடையது... உனக்கான எல்லைகள் மிக கடினமானவைகள்... உன் அனுமதியின்றி உள் நுழைய முடியாது... அதை போலவே உன்னிடம் அனுமதி பெற நெருங்குவதும் அவ்வளவு எளிதல்லவே ???

தன்னம்பிக்கை கற்று தந்தாய்... உன் செல்ல திட்டுகள் கூட எதையாவது கற்று தரும்... அன்று முதல் இன்று வரை 'குரு' பரிணாமம் மட்டும் மாறவே இல்லை உன்னிடம்... உன்னிடமிருந்து கற்று கொள்ள ஆயிரமாயிரம் இருக்குமே தவிர... உனக்கு கற்று தருவது என்பது ஒரு நாளும் நடக்க முடியாத ஒரு செயல்... நீ ஏற்று கொள்ள போவதும் இல்லை...

குழந்தையென உன் உறவு... குதூகலத்தை தருவதில் என்றும் எனக்கு குறை வைத்தது இல்லை ... அமுத சுரபி என ... நீயும் எதை செய்தாலும் கோபம் வருவதில்லை ... வருத்தங்கள் பல உண்டு... சிறு குழந்தை செய்யும் தவறுகளுக்கு கோப பட முடியுமா???

உன்னிடம் எந்த  எதிர்பார்ப்பும் இல்லை என சொல்ல முடியாது... ஏனெனில் , உன்னிடம் எந்த எதிபார்ப்பும் இல்லை என்று சொல்ல நீ என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பேராசை அனைத்தும் உள்ளது....

உனக்கான உலகம் மிக சிறியது... மிக மிக அழகானது... என்றும் எனக்கு ஒய்வு தரும் ஒரு குட்டி சொர்கமல்லவா ...

நாம் நம் வாழ்வினில் சந்திக்கும் அனைத்தும் விபத்துகள் அல்லவே ??? ஏதோ ஒரு காரணத்திற்கு மட்டுமே அனைத்து சந்திப்புகளும் நடைபெறுகிறது... நான் உன்னை சந்தித்ததும் அப்படிதான் என நம்புகிறேன்...

எத்தனை எத்தனை முரண்பாடுகள் நம் இருவருக்குள்... அத்தனையும் தாண்டி இன்றும் இனிதே இந்த பயணம் தொடருகிறது... இனி பயமில்லை... காலமெல்லாம் தாண்டி வல்ல்கை கடலின் கரையை தொட்டு விடும் நம் உறவு படகு... ஆனால் மனதில் சின்ன நெருடல்... சரியா தவறா தெரியாது..மனதில் சட்டென்று சிறு வலி தோன்றுகிறது... எனக்கான உன் நேரங்கள் ஏற்கனவே பகிர்ந்தளிக்க பட்டுவிட்டது... இனி ... கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒன்றுதான்... ஏன், என்னுடைய வேண்டுதலும் கூட... கனவும் கூட... கனவு கை கூடி வரும் போது சிறு வலி... இனி நீயும் வாழ்க்கை சக்கரத்தில் சுழல தொடங்கி விடும்போது நான் மறைந்து போகாமல் இருக்க வேண்டுமென.... உன்னிடம் சொல்லியது தான்... உரக்க கத்தியதுதான்...

"இன்று மட்டுமல்ல... என்றும் தொடரும்... எனது ஏகாந்த தொந்திரவுகள்"
                    
                                                                        இவள்





ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்....

ஒவ்வொன்றிலும் ஒரு சுகம்.... அழுகை, ஆறுதல், அன்பு, என அனைத்திலும்... பெறுவதில் மட்டுமல்ல ... தருவதிலும் தாராளமான சுகமிருக்கிறது... சில இடங்களில் ஏமாற்றம் கூட வலியுடன் கூடிய சுகமாகவே இருப்பதுதான் அதிசயம் .... சில பிரிவுகளும் .... நடக்க போகும் நன்மைக்காக சில பிரிவுகளை வலிய ஏற்கும் போதும் வேதனையான சுகம் தான், நினைவுகளின் வடிவினில் ... 

இந்த சுகமான தருணங்களின் வரிசையில் முக்கிய இடம்.... "எழுதுவது - பகிர்வது ".... மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர, நல்ல நட்பினை தரும் இடம்.... எழுதுகோலுக்கும் காகித தாளுக்கும் இருக்கும் பரிசுத்த பகிர்வில் மனமெல்லாம் மயிலிறகாய் மாறி விடும் மாயம் இங்கு மட்டும் தான்.... வார்த்தைகளில் வெளிப்பட தயங்குவதெல்லாம் , புது காவிரி வெள்ளமென மடைதிறந்து கொட்டும் இடம் .... நம் மனதிற்கு நாமே நீதி வழங்கும் வழக்காடு மன்றம்.....

இதெல்லாம் தெரிந்திருந்தும் ... மிக பெரிய தவறென இந்த சொர்கத்தை மறக்க வேண்டிய சில பல சூழ்நிலைகள் .... இதுவே சரியான தருணம் என உணர்கிறேன் ...தவறுகளை திருத்தி கொள்ள .... இதோ வந்து விட்டேன் என் நட்பே.... உன்னிடமான என் உறவு என்றுமே நான் வருந்த விட்டதில்லை .... தவறு செய்து விட்டோமா ? என யோசிக்க அனுமதித்ததில்லை .... அத்தனையும் சரியாக அமைந்த பொழுது ஏது வருத்தப்பட நேரம் ???? உணர்ந்து விட்டேன் .... உன்னை கை கொண்டு விட்டேன் இப்போது .... உன்னை கண்டு பலர் பயப்படவும் செய்கின்றனர்... ஆனால் எனக்கு மட்டும் ஏனோ என்றும் மனதிற்கு மிக அருகினில்..... வந்து விட்டேன்.... இன்னும் 7 நாட்கள் மட்டுமே... சிறு வயதில், வங்கி வைத்த புது துணியை தினமும் தடவி பார்த்து மனம் குதூகலிக்கும்.... உடுத்த போகும் நாட்களுக்காக கனவுகளுடன் காத்திருக்கும்... இங்கும், இன்றும் அதே நிலை... உன் நினைவுகள் மேலோங்கி நிற்கிறது... நாட்களை நகர சொல்லி அவசர படுத்த தோன்றுகிறது... என்ன விந்தை உணர்வுகள்... இருப்பினும் இதும் சுகமாகவே இருக்கிறது...

புது வருட நாள் முதல் நம் பகிர்வுகள் ஆரம்பம் ...இனி எல்லாம் ஜெயமே ! நம்பிக்கையின் மறு உருவமாக, வேண்டியதெல்லாம் தந்து கொண்டிருந்த மாயாஜாலம் நீ.... ஆதலால் உரைக்கிறேன் .... இனி எல்லாம் ஜெயமே ....

இவள் 

இனியவள் .....