, இனியவளின் இதய பகிர்வுகள் !: January 2012

1/5/12

தாண்டவகோனே தாண்டவகோனே!


தாண்டவகோனே தாண்டவகோனே
தாண்டி குதிக்குது  மனசு தாண்டவகோனே
தரம் தெரியாமல்  மனம் கெட்டு
தடுமாறி தடம் மாறி போகுது தாண்டவகோனே !

தாண்டவகோனே தாண்டவகோனே
நாளை நடப்பது தெரியாமல் தாண்டவகோனே
நயவஞ்சகம் புரியாமல் நம்பி தானே
நடு ஆற்றில் நிக்க போகுது தாண்டவகோனே !

தாண்டவகோனே தாண்டவகோனே
காலம் சொல்லி தரும் தாண்டவகோனே
கன்னியின் குலம்தனை காக்க
காத்து நீயும் விட்டு விடு  தாண்டவகோனே!


இவள்

இசையானவள் !